முகப்பு /செய்தி /விளையாட்டு / மெல்போர்ன் டெஸ்ட் - தோல்வியைத் தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்!

மெல்போர்ன் டெஸ்ட் - தோல்வியைத் தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்!

ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர் மிச்செல் மார்ஷ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். (BCCI)

ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர் மிச்செல் மார்ஷ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். (BCCI)

Paine Departs, India March Towards Big Win | 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.

  • 1-MIN READ
  • Last Updated :

மெல்போர்ன் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் பந்து வீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பால் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா (106), விராட் கோலி (82), ரோகித் சர்மா (63) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்னில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

Pujara, புஜாரா
மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்து அசத்திய புஜாரா. (BCCI)

பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால், 151 ரன்களில் சுருண்டது. பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆஸி.க்கு ‘பலோ ஆன்’ கொடுக்காமல், 296 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-ம் இன்னிங்சை தொடங்கியது. 3-ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தது.

Rishabh Pant, ரிஷப் பண்ட்
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை பவுண்டரிக்கு விரட்டிய ரிஷப் பண்ட். (AP)

4-ம் நாள் ஆட்டம் இன்று (29.12.18) தொடர்ந்த நிலையில், 8 விக்கெட்டுகளுக்கு 106 ரன்கள் எடுத்து இந்திய அணி டிக்ளேர் செய்தது.

இதன்மூலம், 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்கவீரர்கள் பிஞ்ச் (3) மற்றும் ஹாரிஸ் (13) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Shami ஷமி, Cummins
ஆஸி. விக்கெட்டை வீழ்த்திய முகமது ஷமியை பாராட்டும் இந்திய வீரர்கள். (ICC)

கவாஜா (33), ஷேன் மார்ஷ் (44), மிச்செல் மார்ஷ் (10), டிராவிஸ் ஹெட் (34) ஆகியோர் சீரான இடைவெளியில் வெளியேறினர். போராடிய கேப்டன் டிம் பெய்ன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதால் மெல்போர்னில் இந்தியா வெற்றியை நோக்கி செல்கிறது.

Also Watch...

First published:

Tags: India vs Australia 2018, Jasprit bumrah, Ravindra jadeja