மெல்போர்ன் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ‘பாக்சிங் டே’ (26.12.18) டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில், 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக, புஜாரா சதம் அடித்து அசத்தினார்.
பின்னர், 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 3-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
296 ரன்கள் முன்னிலை உடன் இந்திய அணி 2-ம் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் ஹனுமா விஹாரி 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாராவும், கோலியும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
Pat Cummins this arvo: W . W . . . W W
Oh what a feeling! #AUSvIND | @toyota_aus pic.twitter.com/weKfyagT4B
— cricket.com.au (@cricketcomau) December 28, 2018
இதனை தொடர்ந்து, ரகானே ஒரு ரன்னிலும், ரோகித் சர்மா 5 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இந்திய அணி 44 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. முதல் 4 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் வீழ்த்தினார்.
Also Watch...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.