தொடரை வெல்ல இந்திய அணியில் 4 முக்கிய மாற்றம்!

தொடரை வெல்ல இந்திய அணியில் 4 முக்கிய மாற்றம்!

இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)

#INDvAUS, #KLRahul replaces #AmbatiRayudu in 4th ODI as India make four changes | டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மொகாலியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற இந்திய அணியில் 4 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

  ராஞ்சியில் நடந்த 3-வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

  Australia Team, ஆஸ்திரேலிய அணி
  ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. (CricketAustralia)


  இரு அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி மொகாலியில் இன்று (மார்ச் 10) நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

  இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்ற இந்திய அணியில் 4 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விக்கெட் கீப்பர் தோனிக்குப் பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பதி ராயுடுக்கு பதில் கே.எல்.ராகுலும், ஜடேஜாவுக்கு பதில் சாஹலும், முகமது ஷமிக்கு பதில் புவனேஸ்வர் குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  India XI, இந்திய லெவன் அணி
  இந்திய லெவன் அணி. (BCCI)


  கோலிக்கு எப்படி பவுலிங் போட வேண்டும்? ஆஸி. பவுலர்களுக்கு வார்னே அட்வைஸ்!

  Also Watch...

  Published by:Murugesan L
  First published: