Home » News » Sports » CRICKET INDIA VS AUSTRALIA JASPRIT BUMRAH RULED OUT OF BRISBANE TEST MUT

இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு: பிரிஸ்பன் டெஸ்ட்டிலிருந்து பும்ரா விலகல்- நடராஜனுக்கு வாய்ப்பு?

ஏற்கெனவே ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஜடேஜா, ஹனுமா விஹாரி என்று காயத்தினால் இந்திய அணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பவுலிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் பும்ராவும் விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு: பிரிஸ்பன் டெஸ்ட்டிலிருந்து பும்ரா விலகல்- நடராஜனுக்கு வாய்ப்பு?
பிரிஸ்பன் டெஸ்ட்டிலிருந்து பும்ரா விலகல்.
  • Share this:
பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ வட்டாரத் தகவல்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அடிவயிறு வலி காரணமாக அவர் பிரிஸ்பன் டெஸ்ட்டில் விளையாட முடியாது என்று அந்தச் செய்தி தெரிவித்துள்ளது. அவரது காயம் இன்னும் அதிகமாகாமல் தடுக்க அவருக்கு ஓய்வு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் பிப்ரவரியில் இருப்பதால் அதற்குள் அவர் தயாராக வேண்டும் என்பதற்காக பிரிஸ்பனில் அவர் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


ஏற்கெனவே ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஜடேஜா, ஹனுமா விஹாரி என்று காயத்தினால் இந்திய அணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பவுலிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் பும்ராவும் விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக வீரர் டி.நடராஜனுக்கு பிரிஸ்பனில் வாய்ப்பு வழங்கப்படலாம். ஏனெனில் ஜடேஜாவுக்குப் பதிலாக ஷர்துல் தாக்குர் அணியில் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

இந்நிலையில் பிரிஸ்பனில் அனுபவம் குறைந்த சிராஜ், ஷர்துல் தாக்குர், சைனி, டி.நடராஜன் கூட்டணி வேகப்பந்து வீச்சில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி ஜனவரி 15ம் தேதி தொடங்குகிறது.
First published: January 12, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading