அனில் கும்பிளேயைச் சமன் செய்த ஜஸ்பிரித் பும்ரா- மெல்போர்னில் சாதனை

அனில் கும்பிளேயைச் சமன் செய்த ஜஸ்பிரித் பும்ரா- மெல்போர்னில் சாதனை

பும்ரா

மெல்போர்னில் இந்திய பவுலர் ஒருவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை வைத்திருந்த முன்னாள் கேப்டன் அனில் கும்பிளேவின் சாதனையை பும்ரா சமன் செய்தார்.

 • Last Updated :
 • Share this:
  மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அதியற்புதமாக வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, பாட் கமின்சை இன்று பவுன்சரில் வீழ்த்திய போது மெல்போர்னில் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனையாளர் ஆனார்.

  மெல்போர்னில் இந்திய பவுலர் ஒருவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை வைத்திருந்த முன்னாள் கேப்டன் அனில் கும்பிளேவின் சாதனையை பும்ரா சமன் செய்தார்.

  கமின்ஸ் 103 பந்துகள் நின்று பொறுமையைச் சோதித்து 22 ரன்கள் எடுத்த நிலையில் இன்று புதிய பந்தில் பும்ரா வீசிய பவுன்சர் தொண்டைக்குழிக்கு வர தாறுமாறாக தடுத்தாட ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

  2018-19 தொடரிலும் பும்ரா மெல்போர்னில் 33 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சாதனையையும் தன்னகத்தே கொண்டுள்ளார்.

  கபில்தேவ், கும்பிளே, சந்திரசேகர் ஆகியோர் இருமுறை மெல்போர்னில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். பும்ரா ஒரு முறை 5 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

  முன்னதாக 133/6 என்று தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணி தற்போது 70 ரன்கள் வெற்றி இலக்குக்கு எதிராக 48/2 என்று ஆடி வருகிறது, ரஹனே, கில் ஆடி வருகின்றனர்.
  Published by:Muthukumar
  First published: