ஸ்டம்ப்களை தெறிக்கவிட்ட இஷாந்த் சர்மா..! பரிதாபமாக வெளியேறிய ஃபிஞ்ச்.. (வீடியோ)

#IshantSharma makes a mess of #AaronFinch’s stumps | முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்த இஷாந்த சர்மா, அந்த ஓவரில் ரன் கொடுக்காமல் மெய்டனாக வீசி அசத்தினார். #AUSvIND #Adelaide

Web Desk | news18
Updated: December 7, 2018, 12:42 PM IST
ஸ்டம்ப்களை தெறிக்கவிட்ட இஷாந்த் சர்மா..! பரிதாபமாக வெளியேறிய ஃபிஞ்ச்.. (வீடியோ)
ஃபிஞ்ச் விக்கெட்டை எடுத்த இஷாந்த் சர்மா (BCCI)
Web Desk | news18
Updated: December 7, 2018, 12:42 PM IST
அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ‘புல்லட் ட்ரைன்’ வேகத்தில் வீசிய பந்து ஸ்டெம்பை தெறிக்கவிட்டதால் ஆஸ்திரேலிய வீரர் ஃபிஞ்ச் பரிதாபமாக வெளியேறினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே சறுக்கலாக அமைந்தது. டாப் ஆர்டர் வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறினர். கே.எல்.ராகுல் (2), முரளி விஜய் (11), விராட் கோலி (3) என அனைவரும் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, புஜாரா நிதானமாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவர் தனது 16-வது சதத்தை பூர்த்தி செய்தார். முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் 123 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அந்த நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 250 ரன்களை எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே ஷமி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்மூலம், முதல் இன்னிங்சில் இந்திய அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Loading...


அதன்பிறகு, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்கவீரர்களாக ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் மார்கஸ் ஹேரிஸ் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய இஷாந்த் சர்மா வழக்கத்தை விட அசுர வேகத்தில் பந்தை வீசிக்கொண்டிருந்தார். 3-வது பந்தை ஃபிஞ்ச் தடுக்க முயன்றபோது, ‘புல்லட் ட்ரைன்’ வேகத்தில் வீசிய பந்து கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டெம்பை பதம்பார்த்தது.போல்டான ஃபிஞ்ச் பரிதாபமாக வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி ரன் கணக்கை தொடங்குவதற்கு முன்பே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்த இஷாந்த சர்மா, அந்த ஓவரில் ரன் கொடுக்காமல் மெய்டனாக வீசி அசத்தினார்.

Also Watch...

First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்