முகப்பு /செய்தி /விளையாட்டு / சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. சுருண்ட இந்தியா: ஆஸ்திரேலியாவை மிரட்டிய ஜடேஜா

சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. சுருண்ட இந்தியா: ஆஸ்திரேலியாவை மிரட்டிய ஜடேஜா

ரோகித் சர்மா - ஜடேஜா

ரோகித் சர்மா - ஜடேஜா

India vs Australia 3rd Test | ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி 109 ரன்களுக்கு சுருண்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Indore, India

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேனா 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சிஸ் 4 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பின் தங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

இந்திய அணியின் தொடர்ந்து சொதப்பி வந்த கே.எல்.ராகுல் இந்த போட்டியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன்கில் களம் இறங்கினர். குனேமேன் வீசிய 6வது ஓவரில் ரோகித் சர்மா (12 ரன்) ஸ்டம்பிங் ஆனார். அடுத்த புஜாரா களம் வந்தார். மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில் 21 ரன்னில் அவுட் ஆனார்.

இந்தூர் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என நினைத்த நிலையில் பந்து சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தது. இதனால் அடுத்து புஜாராவுடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். புஜாரா ஒரு ரன்னிலும், அடுத்து களம் ஜடேஜா 4 ரன்னிலும், நாதன் லயன் பந்திலும், ஸ்ரேயாஸ் அய்யர் ரன் எதுவும் எடுக்காமல் குனேமேன் பந்திலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

இந்தியா 45 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறிய நிலையில் சற்று நிலைத்து விளையாடிய விராட் கோலியும் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில், 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மேதிவ் குஹ்னிமென் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 3 விக்கெட்டையும், மொர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

5 விக்கெட்டுகளை வீழ்த்திய மேதிவ் குஹ்னிமென்

இதனை தொடர்ந்து களமிறங்கி ஆஸ்திரேலிய அணியில் டிரவிஸ் ஹெட் 6 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆவுட் ஆகி வெளியேறினார். இதனை தொடர்ந்து களமிறங்கிய லபுசானே - உஸ்மான் கவாஜா ஜோடி சற்றி நிலைத்து விளையாடியது. 31 ரன்களில் எடுத்திருந்த லபுசானேவை ஜடேஜா வெளியேற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கவாஜா 60 ரன்கள் எடுத்து ஆவுட் ஆனார்.

விக்கெட் வீழ்த்திய கொண்டாடத்தில் இந்திய நி வீரர்கள்

அடுத்த கேப்டன் ஸ்மித் 23 ரன்களில் வெளியேறிய நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டை இழந்து 156 ரன்களை எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 4 விக்கெட்டையும் அவரே வீழ்த்தினார். இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி 47 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில் நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

First published:

Tags: India vs Australia, Indore, Ravindra jadeja