முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்… தீவிர வலைப் பயிற்சியில் இந்திய அணி…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்… தீவிர வலைப் பயிற்சியில் இந்திய அணி…

பயிற்சியில் இந்திய அணி

பயிற்சியில் இந்திய அணி

சிராஜ், ஷமி, உமேஷ்யாதவ் ஜெயதேவ் உனாட்கட் ஆகிய 4 வேகப்பந்து பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி அடுத்த வாரம் வியாழனன்று நாக்பூரில் தொடங்குகிறது.

உள்ளூரில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பெரும்பாலான ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இந்தியா செல்லும்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ளனர்.

சிராஜ், ஷமி, உமேஷ்யாதவ் ஜெயதேவ் உனாட்கட் ஆகிய 4 வேகப்பந்து பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் அல்லது இஷான் கிஷன் இருவரில் ஒருவர் களத்தில் இறங்க உள்ளனர். அவர்களை தவிர்த்து அணியில் விராட் கோலி, புஜாரா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்

First published:

Tags: Cricket