ICC ODI Ranking: முதல் இடம் பிடிக்க இந்தியாவுக்கு வாய்ப்பு

India look to close on No.1 in #ICC #ODIRankings | டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கிறது.

news18
Updated: January 9, 2019, 9:05 PM IST
ICC ODI Ranking: முதல் இடம் பிடிக்க இந்தியாவுக்கு வாய்ப்பு
இந்திய கிரிக்கெட் அணி. (File)
news18
Updated: January 9, 2019, 9:05 PM IST
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை முழுவதுமாக கைப்பற்றினால் இந்திய அணி நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, அணிகள் தரவரிசையில் இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கிறது.

Indian Team, இந்திய கிரிக்கெட் அணி
களத்தில் இந்திய அணி வீரர்கள். (PTI)


இந்திய அணி 121 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுவதுமாக வென்ற நியூசிலாந்து அணி 113 புள்ளிகளுடன் 3-வது இடத்தை தக்க வைத்துக்கொண்டது. 4-வது இடத்தில் 111 புள்ளிகளுடன் தென்னாப்ரிக்கா அணி உள்ளது.

SL, New Zealand, நியூசிலாந்து, இலங்கை
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுவதுமாக நியூசிலாந்து வென்றது. (ICC)


2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், மே மாதம் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு முன், 21 நாட்களில் 13 சர்வதேச ஒருநாள் போட்டிகளே நடைபெற உள்ளன. அதில், இந்திய அணி 8 போட்டிகளில் விளையாட உள்ளது. உலகக் கோப்பைக்கு முன் தரவரிசையில் சிறிது மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Up Coming Fixtures, போட்டி அட்டவணை
உலகக்கோப்பை முன்னதாக நடைபெறும் போட்டிகள். (ICC)
Loading...
இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும், நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் முழுவதுமாக கைப்பற்றினால், நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.

இது ஒன்னும் அவ்ளோ பெரிய வெற்றியில்லை: சஞ்சய் மஞ்ச்ரேகர் விளாசல்.

Also Watch...

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்