முகப்பு /செய்தி /விளையாட்டு / அரைமணி நேரம் எக்ஸ்ட்ரா பந்துவீசிய இந்திய அணி.. கோலியின் தந்திரம் வீணானது!

அரைமணி நேரம் எக்ஸ்ட்ரா பந்துவீசிய இந்திய அணி.. கோலியின் தந்திரம் வீணானது!

கேப்டன் விராட் கோலி. (BCCI)

கேப்டன் விராட் கோலி. (BCCI)

India have taken the extra half an hour | 4-ம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு முடிய வேண்டியது. ஆனால், போட்டி கூடுதலாக அரைமணி நேரம் நீட்டிக்கப்பட்டது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மெல்போர்ன் டெஸ்டின் 4-ம் நாளில் ஆஸ்திரேலிய அணியை ஆல் அவுட்டாக்க இந்திய அணி அரைமணி நேரம் கூடுதலாக பந்துவீசியது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால், 151 ரன்களில் சுருண்டது.

Indian Team, மிச்செல் மார்ஷ்
ஆஸ்திரேலிய வீரர் மிச்செல் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள். (BCCI)

296 ரன்கள் முன்னிலையுடன் 2-ம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.

Shami ஷமி, Cummins
ஆஸி. விக்கெட்டை வீழ்த்திய முகமது ஷமியை பாராட்டும் இந்திய வீரர்கள். (ICC)

4-ம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு முடிய வேண்டியது. ஆனால், போட்டி கூடுதலாக அரைமணி நேரம் நீட்டிக்கப்பட்டது. இதற்கு காரணம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிதான். ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் உள்ளன.

விராட் கோலி, Virat Kohli
வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் கேப்டன் விராட் கோலி. (AP)

முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்துவிட்டனர். பந்துவீச்சாளர்கள் மட்டுமே பேட்டிங் செய்து வருகின்றனர். அவர்களை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற எண்ணத்தில் கோலி கூடுதலாக அரைமணி நேரத்தைக் கேட்டு வாங்கினார். ஆனால், ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. ஆஸ்திரேலிய அணியின் போராட்டம் கடைசி நாளான நாளையும் (30.12.18) தொடர உள்ளது.

Also Watch...

First published:

Tags: India vs Australia 2018, Melbourne, Virat Kohli