கடந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா சென்று வென்ற போது இந்திய பவுலர்கள் தன்னை வென்று விட்டனர் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். முதல் 2 போட்டிகளில் இந்திய அணியினர் என்னை சாமர்த்தியமாக வீழ்த்தி விட்டனர். 3வது போட்டியில் நான் சதமெடுத்தேன் என்று கூறியுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.
கடந்த ஆஸ்திரேலியா தொடரில் ரவி சாஸ்திரி சொன்ன யோசனையால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மென்களை லெக் திசையில் கள வியூகம் நெருக்கமாக அமைத்து காலி செய்தனர். நேராக வீசி ஸ்மித்தின் ரன் எடுக்கும் வாய்ப்புகளை முடக்கினர். லெக் திசையில் அவரது ரன் வாய்ப்புகளை சுவர் போல் நிறுத்தி தடுத்து நிறுத்தினர். ஆனால் இந்திய அணியின் இந்த உத்தி தனக்கு ஆச்சரியம் ஏற்படுத்தவில்லை என்கிறார் ஸ்டீவ் ஸ்மித்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “இந்தியா என் மீது பாய்ந்தது குறித்து எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை. நான் ரன் எடுக்கும் இடங்களை அடைத்தனர். என் பொறுமைச் சோதித்தனர். முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் என்னை அவர்கள் வீழ்த்தினார்கள். பிறகு சிட்னியில் சதம் எடுத்தேன். சிட்னியில் சொல்லப்போனால் நன்றாகவே ஆடத்தொடங்கினேன்.
இப்போது என் ஆட்டம் நன்றாக செட் ஆகியுள்ளதாகவே கருதுகிறேன். யாரை எதிர்த்து ஆடுகிறோம் என்பதைப் பொறுத்து சிறு சிறு சிக்கல்களும் அதை சமாளிக்கும் விதங்களும் முன்னிலை பெறும். நீண்ட நாள் ஆடுவதால் தகவமைத்துக் கொள்வது அவசியம். எதிரணியினர் பலதரப்பட்ட வியூகங்கள், களவியூகங்கள், உத்திகளுடன் வருவார்கள். அதை முறியடிக்க நானும் திட்டமிட வேண்டும். அதுக்காகத்தான் தினமும் மேம்பாடு அடைய போராடி வருகிறேன். எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் என் சிந்தனைப் போக்கு” என்றார் ஸ்டீவ் ஸ்மித்.
அநேகமாக இவர் கூறுவதைப் பார்த்தால் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு பெரிய தலைவலி இருக்கிறது என்றே தெரிகிறது. பிரிஸ்பன் மைதானத்தில் ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 8ம் தேதி தொடங்குகிறது.
Also Read: அஜாஜ் படேல் 14 விக்கெட்டுகள்: அஸ்வின் பிரமாதம்- வெற்றியை நோக்கி இந்தியா
ஆட்ட நேரம் இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்குத் தொடங்கும், சோனி தொலைக்காட்சியில் லைவ் ஆக இந்தத் தொடரைப் பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ashes, Australia, Steve Smith