புத்திசாலி கிரிக்கெட் வீரர் என்பதை நிரூபித்த தோனி! - வீடியோ

புத்திசாலி கிரிக்கெட் வீரர் என்பதை நிரூபித்த தோனி! - வீடியோ

நடுவரிடம் பேசிய தோனி. (Video Grab)

Dhoni proved he has the finest cricketing brain | 37-வயதான தோனி, தான் ஒரு சிறந்த ‘மேட்ச் பினிசர்’ என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 4 ஓவர்கள் மீதமிருந்தபோது தோனி, கள நடுவரிடம் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டி-20 தொடர் டிராவில் முடிந்தது.

  பின்னர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக கைப்பற்றி இந்திய அணி வரலாறு படைத்தது. இதனை அடுத்து நடந்த ஒரு நாள் தொடர் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என சமனில் இருந்தது. இரு அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நடந்தது.

  ஒரு நாள் தொடருக்கான கோப்பை உடன் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளின் கேப்டன்கள். (BCCI)


  முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 4 பந்துகள் மீதமிருந்தபோது இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரையும் வென்று சாதனை படைத்தது இந்திய அணி.

  team india, இந்திய அணி
  வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி. (Cricket Australia)


  இந்திய அணியின் மூளையாகச் செயல்பட்ட தோனியின் புத்தாலித்தனத்தை காட்டும் விதமான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. போட்டியின் 46-வது ஓவர் முடிந்ததும், தேனீர் இடைவேளை விடப்பட்டது.

  அப்போது, சகவீரர்கள் குளிர்பானங்கள் குடித்துக்கொண்டிருக்க தோனி மட்டும், நடுவரிடம் சென்று ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் யாருக்கெல்லாம் எத்தனை ஓவர்கள் மீதமுள்ளன என்பதை விசாரித்துக்கொண்டிருந்தார்.  4-வது வீரராக களமிறங்கிய தோனி, பொறுமையாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். 37-வயதான தோனி, தான் ஒரு சிறந்த ‘மேட்ச் பினிசர்’ என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.

  ஆஸ்திரேலிய மண்ணில் தோனி செய்த சாதனை!

  Also Watch...

  Published by:Murugesan L
  First published: