பிரிதிவி ஷா தொடர்ந்து ரன் எடுக்காமலே போகட்டும்: ஆஸி. தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் விருப்பம்

பிரிதிவி ஷா தொடர்ந்து ரன் எடுக்காமலே போகட்டும்: ஆஸி. தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் விருப்பம்

தொடக்க வீரர் பிரிதிவி ஷா

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததையடுத்து கடும் விமர்சனத்துக்கு ஆளான இந்திய பேட்டிங் வரிசையில் அனைவரது விமர்சனத்தையும் பெரிய அளவில் ஈர்த்திருப்பவர் இந்திய இளம் தொடக்க வீரர் பிரிதிவி ஷா.

 • Share this:
  அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததையடுத்து கடும் விமர்சனத்துக்கு ஆளான இந்திய பேட்டிங் வரிசையில் அனைவரது விமர்சனத்தையும் பெரிய அளவில் ஈர்த்திருப்பவர் இந்திய இளம் தொடக்க வீரர் பிரிதிவி ஷா.

  கடந்த முறையே ஆஸ்திரேலியா தொடருக்கு ஆட வந்திருக்க வேண்டியவர், காயம் காரணமாக துரதிர்ஷ்டவசமாக ஆஸி. வரமுடியாமல் போனது, இந்த முறை அவர் அவ்வளவு சரியான பார்மில் இல்லாத நிலையில் அணியில் தேர்வு செய்யப்பட்டார். நியூஸிலாந்தில் நன்றாக ஆடிய காரணத்தினால் அவர் தொடக்க வீரராக அடிலெய்ட் டெஸ்ட்டில் நீடித்தார்.

  ஆனால் கால் எந்த விதத்திலும் நகராமல் முதல் இன்னிங்சில் ஸ்டார்க் பந்தில் குச்சி பறக்க, 2வது இன்னிங்சில் கமின்ஸ் பந்தில் மீண்டும் அதே மாதிரியான பந்தில் குச்சி எகிறியது. பூஜ்ஜியம், 4 என்பதே ஷாவின் ஸ்கோராக அமைந்து பலருக்கும் கடும் ஏமாற்றமளித்தார்.

  இந்நிலையில் இவருக்குப் பதிலாக ராகுலையோ, ஷுப்மன் கில்லையோ கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் பார்முக்கு தடுமாறும் வேளையில் 2வது இன்னிங்ஸில் இந்திய பவுலர்களின் ஷார்ட் பிட்ச் பந்து வீச்சினால் பயனடைந்து ஒரு அரைசதம் எடுத்ததோடு, சிக்சரில் போட்டியை வென்று ஆஸ்திரேலிய அணியில் தன் இடத்தை தக்க வைத்துள்ளார்.

  பிரித்வி ஷா பற்றி அவர் கூறியதாவது, “இந்திய பேட்ஸ்மென்களுக்கு நான் எந்த ஒரு யோசனைகளையும் இப்போது வழங்க மாட்டேன், தொடர் முடிந்தவுடன்தான் வழங்குவேன். பிரிதிவி ஷா என்ன மாதிரியான பார்மில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. இப்போது அவரை எதிர்த்து ஆடுவதால் அவருக்கு நான் எந்த ஆலோசனைகளையும் வழங்க மாட்டேன். அவர் தொடர்ந்து ரன்கள் எடுக்காமல் இருப்பதையே விரும்புகிறோம், எடுக்க மாட்டார் என்று நம்புகிறோம்.

  இந்தியாவுக்கு பிரிதிவி ஷா ஆடுகிறார் என்றால் நிச்சயம் ஷா ஒரு தரமான வீரராகவே இருக்க வேண்டும். தொடர் முடிந்தவுடன் அவருக்கு அறிவுரை வழங்குவேன், இப்போது அல்ல” என்றார்.
  Published by:Muthukumar
  First published: