அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட திடீர் பேட்டிங் சரிவு மற்றும் இதனையடுத்த தோல்வியின் காரணமாக டிச.26ம் தேதி தொடங்கும் பாக்சிங் டே மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட திடீர் பேட்டிங் சரிவு மற்றும் இதனையடுத்த தோல்வியின் காரணமாக டிச.26ம் தேதி தொடங்கும் பாக்சிங் டே மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, திணறும் பிரிதிவி ஷா ஆகியோருக்குப் பதிலாக ஷுப்மன் கில் மற்றும் ராகுல், ரிஷப் பந்த் ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சிட்னி டெஸ்ட் போட்டிக்குத்தான் ரோஹித் சர்மா இந்திய அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஷாவுக்குப் பதில் ராகுல் அல்லது கில் தொடக்கத்தில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய அணி நிர்வாக வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஷுப்மன் கில் பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக ஆடியதோடு, அவர் ஒரு மிக அருமையான பேக்ஃபுட் பிளேயர் என்பதால் ஆஸ்திரேலிய பிட்ச்களில் அவர் பரிமளிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளன.
அதே போல் விருத்திமான் சஹாவின் பேட்டிங் நம்பிக்கை அளிப்பதாக இல்லாததால் ஆஸ்திரேலியாவில் கடந்த தொடரில் அருமையாக ஆடிய ரிஷப் பந்த் சஹாவுக்குப் பதில் ஆடுவார் என்பதும் கூறப்படுகிறது.
முகமது ஷமி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியிருப்பதால் மொகமது சிராஜ் வருகிறார், அதே போல் கே.எல்.ராகுலும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார்.
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் விருத்திமான் சஹா அரைசதம் எடுத்ததில்லை என்பதும் சஹாவுக்கு எதிரான ஒரு விஷயமாக மாறியுள்ளது.
முன்னாள் இந்திய அணித்தேர்வுக்குழு தலைவராக இருந்த எம்.எஸ்.கே. பிரசாத் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஞாயிறன்று கூறும்போது, “இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் ரிஷப் பந்த் தான் விக்கெட் கீப்பராக முதல் தெரிவு. இந்தியாவில்தான் ஸ்பெஷலிஸ்ட் கீப்பர் தேவைப்படும்.
ரிஷப் பந்த் தனது உடல் தகுதியை சரியாக வைத்திருப்பதோடு, பயிற்சி ஆட்டத்தில் பிங்க் நிறப்பந்தில் அபாரமாக பேட்டிங் செய்ததையும் நாம் கருத வேண்டியுள்ளது. எனவே அணி நிர்வாகம் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு ரிஷப் பந்த்தை தேர்வு செய்வதை நான் ஆதரிக்கிறேன்” என்றார்.
ஹனுமா விஹாரியை முன்னால் களமிறக்க முடிவு:
விராட் கோலி இல்லாததால் ஹனுமா விஹாரியை பேட்டிங்கில் முன்னால் களமிறக்கவும் அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. எனவே விஹாரியை 4 அல்லது 5ம் இடத்தில் இறக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அதே போல் நவ்தீப் சைனியை விட பயிற்சி ஆட்டத்தில் நன்றாக வீசிய முகமது சிராஜுக்கு வரும் போட்டியில் வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.
(பிடிஐ தகவல்களுடன்)
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.