Home » News » Sports » CRICKET INDIA VS AUSTRALIA GAMBHIR WANTS JADEJA AND FIVE BOWLERS FOR 2ND TEST MUT

ஹனுமா விஹாரியை நீக்கி ஜடேஜாவைச் சேர்க்க வேண்டும்; 5 பவுலர்கள் அவசியம்: கவுதம் கம்பீர் கருத்து

அடிலெய்ட் டெஸ்ட் போட்டித் தோல்வி ஏதோ விளையாடிய வீரர்களின் தவறாகக் கருதப்பட்டு மாற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஹனுமா விஹாரியை நீக்கி ஜடேஜாவைச் சேர்க்க வேண்டும்; 5 பவுலர்கள் அவசியம்: கவுதம் கம்பீர் கருத்து
2வது டெஸ்ட்டுக்கு கம்பீர் பரிந்துரைக்கும் மாற்றங்கள்
  • Cricketnext
  • Last Updated: December 22, 2020, 1:50 PM IST
  • Share this:
அடிலெய்ட் டெஸ்ட் போட்டித் தோல்வி ஏதோ விளையாடிய வீரர்களின் தவறாகக் கருதப்பட்டு மாற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஷுப்மன் கில், ராகுல் வேண்டும் என்று கவாஸ்கர் கூறியதையடுத்து தற்போது கவுதம் கம்பீரும் தன் பங்கிற்கு அணி மாற்றங்களை பரிந்துரை செய்துள்ளார்.

எப்போதும் ஆடும் வீரர்களை விட வெளியே இருக்கும் வீரர்கள் ‘பெட்டர்’ என்று தோன்றுவது தோல்வியேற்படுத்தும் ஒரு மனோநிலைதான்.

அடிலெய்ட் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் இவர்கள் இப்போது பரிந்துரைக்கும் வீரர்கள் ஆடியிருந்தாலும் எட்ஜிலிருந்தும் தோல்வியிலிருந்தும் இந்திய அணி தப்பிக்க வாய்ப்பில்லை ஏனெனில் யார் ஆடினாலும் இவர்கள் ஆடிய அதே உத்தியில் ஆடினால் அம்பேல்தான். பரிந்துரைக்கப்படும் வீரர்களும் வித்தியாசமான உத்தி உள்ளவர்கள் என்பதற்கான தடயங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.


ஹனுமா விஹாரிக்குப் பதில் ஜடேஜாவை கொண்டு வந்தால் ஆல்ரவுண்டர் என்பதோடு பந்து வீச்சிலும் அவர் சிறப்பாக வீசுவார் என்று கம்பீர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு கவுதம் கம்பீர் கூறியதாவது:

பிரித்வி ஷாவின் பார்மை விட அவர் இப்போது உள்ள நம்பிக்கைத் தாழ்வான நிலையில் ஆடுவது சரியாகாது. மயங்க் அகர்வாலுடன் இணைந்து ஷுப்மன் கில் இறக்கப்பட வேண்டும்.புஜாரா 3ம் நிலையில் இறங்கினால் ரஹானே 4ம் நிலையில் கோலியின் இடத்தில் இறங்க வேண்டும், அவர் 5ம் நிலையில் இறங்குவது சரியாகாது. மேலும் முன்னால் இறங்கி அணியை கேப்டனாக ரஹானே வழிநடத்த வேண்டும்.

ராகுல் 5ம் இடத்திலும் ரிஷப் பந்த் 6ம் இடத்திலும் ஜடேஜா, அஸ்வின் 7 மற்றும் 8ம் இடத்திலும் இறங்கினால் நல்லது. பிறகு 3 வேகப்பந்து வீச்சாளர்கள், இறங்குவார்கள், 5 பவுலர்கள் அவசியம் என்கிறேன் நான்.

இவ்வாறு கூறினார் கம்பீர்.
First published: December 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories