#AUSvIND சரிந்த டாப் ஆர்டர்... காலையிலேயே இப்படி ஒரு அதிர்ச்சியா?

India Vs Australia 1st Test | பெரும் எதிர்பார்ப்புடன் இறங்கிய கேப்டன் விராட் கோலி 3 ரன்களிலேயே கம்மின்ஸ் பந்தில் அவுட் ஆனார்.

Web Desk | news18
Updated: December 6, 2018, 8:30 AM IST
#AUSvIND சரிந்த டாப் ஆர்டர்... காலையிலேயே இப்படி ஒரு அதிர்ச்சியா?
விராட் கோலியின் அவுட்-ஐ கொண்டாடும் ஆஸி வீரர்கள்
Web Desk | news18
Updated: December 6, 2018, 8:30 AM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடிவரும் நிலையில், விராட் கோலி உள்பட 4 முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. எதிரணியில் ஸ்மித், வார்னர் இல்லாதது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி, இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது.

இந்திய அணியில் லோகேஷ் ராகுல், முரளி விஜய், புஜாரா, கோலி, ரஹானே, ரோகித் சர்மா, ரிஷப் பந்த், அஷ்வின், பும்ரா, இஷாந்த் சர்மா, சமி ஆகியோர் இடம்பெற்றனர். டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஆட்டத்தின் 2-ம் ஓவரிலேயே லோகேஷ் ராகுல் 2 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த புஜாரா நிதானமாக விளையாட எதிர்முனையில் தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய் 11 ரன்களில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். பெரும் எதிர்பார்ப்புடன் இறங்கிய கேப்டன் விராட் கோலி 3 ரன்களிலேயே கம்மின்ஸ் பந்தில் அவுட் ஆனார்.
Loading...


இதன் பின்னர் வந்த ரஹானேவும் 13 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். தற்போது, புஜாரா 11 ரன்களிலும் ரோகித் சர்மா 15 ரன்களிலும் பேட்டிங் செய்து வருகின்றனர். 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 56 ரன்கள் எடுத்துள்ளது.

Also See..

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்