தோனி இருந்தால் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை - கேதர் ஜாதவ் புகழாரம்

கேதர் ஜாதவ் மற்றும் தோனி. (BCCI)

India vs Australia: Every time I see #MSDhoni, I feel confident: #KedarJadhav | ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. #INDvAUS

 • News18
 • Last Updated :
 • Share this:
  இக்கட்டான நேரத்திலும் மறுமுனையில் தோனி இருந்தால் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை என்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

  ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான
  முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது.

  Aaron Finch, ஆரோன் பிஞ்ச்
  அவுட்டாகி வெளியேறும் ஆரோன் பிஞ்ச். (Cricket Australia)


  இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால், ஆஸ்திரேலியாவின் ரன் எண்ணிக்கை பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 50 ரன்களும், மேக்ஸ்வெல் 40 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் முகமது ‌ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

  பின்னர் விளையாடிய இந்திய அணி, 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி 59 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 81 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

  Kedar Jadhav, கேதர் ஜாதவ்
  பந்தை பறக்கவிடும் கேதர் ஜாதவ். (ICC)


  ஆட்ட நாயகன் விருது பெற்ற கேதர் ஜாதவ் வெற்றி குறித்து பேசுகையில், “ஆஸ்திரேலியாவிலும் சமீபத்தில் இதுபோன்ற போட்டி ஒன்றில் சேஸிங் செய்தோம். இக்கட்டான நேரத்திலும் மறுமுனையில் தோனி இருக்கும்போது நாம் அதிகம் கவலைப்பட தேவையில்லை.

  மிடில் ஆர்டரில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாட வேண்டும் என்பது உள்ளிட்ட நிறைய விஷயங்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்” என்று கூறினார்.

  VIDEO: தல போல வருமா... ஹேண்ட்ஸ்கோம்பை கலாய்த்த நெட்டிசன்கள்!

  Also Watch...

  Published by:Murugesan L
  First published: