முகப்பு /செய்தி /விளையாட்டு / டெஸ்ட் போட்டிகளில் அரிதான சாதனை... அனில் கும்ப்ளே, அக்தருடன் இணைந்த ரவிந்திர ஜடேஜா

டெஸ்ட் போட்டிகளில் அரிதான சாதனை... அனில் கும்ப்ளே, அக்தருடன் இணைந்த ரவிந்திர ஜடேஜா

ரவிந்திர ஜடேஜா

ரவிந்திர ஜடேஜா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 டெஸ்டிலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 32 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பந்துவீச்சில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்திரா ஜடேஜா அரிதான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இதேபோன்ற சாதனையை 1992-இல் அனில் கும்ப்ளேவும், 2002-இல் பாகிஸ்தான் அணியின் சொயப் அக்தரும் ஏற்படுத்தியிருந்தனர். டெஸ்ட் போட்டிகளில் வலிமை மிக்க அணியாக கருதப்படும் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அடிமேல் அடி வாங்கி வருகிறது. முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் 2ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த போட்டி 3 ஆவது நாளிலேயே தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. முதல் இன்னிங்ஸின்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், 2 ஆவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். குறிப்பாக 2ஆவது இன்னிங்ஸின்போது போல்ட் என்ற முறையில் 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அரிதான சாதனையாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஒரு இன்னிங்ஸில் போல்ட் என்ற முறையில் இந்தியாவின் அனில் கும்ப்ளே மற்றும் பாகிஸ்தான் அணியின் சொயப் அக்தர் ஆகியோர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். 1992-ல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அனில் கும்ப்ளேவும், 2002-ல் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் அக்தரும் இந்த சாதனையை ஏற்படுத்தியிருந்தனர். இதன்பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ரவிந்திரா ஜடேஜா இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். அந்த வகையில் அனில் கும்ப்ளே, அக்தருடன் இணைந்துள்ளார் ரவிந்திர ஜடேஜா. நடந்து முடிந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலுமே ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இவ்விரு டெஸ்டிலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 32 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

First published:

Tags: Cricket