ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி - 27ம் தேதி தொடர் ஆரம்பம்

ஆஸ்திரேலியாவில் வரும் 27ம் தேதி ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி - 27ம் தேதி தொடர் ஆரம்பம்
இந்திய அணி வீரர்கள்.
  • Share this:
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 27ம் தேதி ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, கே.எல்.ராகுல் மற்றும் பிரித்விஷா ஆகியோர் தங்கள் பயிற்சி வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு சென்றுள்ள இந்திய வீரர்கள் தனிமை முகாம்களில் தங்கியுள்ளதுடன் பயிற்சியையும் தொடங்கியுள்ளனர். 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற உள்ளன. இந்திய அணி தரப்பில் பேட்டிங்கில் திறமையான வீரர்கள் உள்ளதால் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.Also read: சிட்னியில் சீறும் நடராஜன்.... பிசிசிஐ வெளியிட்ட அசத்தல் வீடியோ

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிட்னியில் வலைப்பயிற்சியில் நடராஜன் பந்துவீசும் வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
First published: November 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading