1980-ல் போட்டிருந்த ஜெர்சியில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி!

#Aussies to don retro kits | இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (ஜன.12) தொடங்க உள்ளது. #AUSvIND

Web Desk | news18
Updated: January 10, 2019, 8:36 PM IST
1980-ல் போட்டிருந்த ஜெர்சியில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி!
புதிய ஜெர்சியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள். (Cricket Australia)
Web Desk | news18
Updated: January 10, 2019, 8:36 PM IST
இந்தியா உடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி, 1980-களில் பயன்படுத்திய அதே நிறத்திலான ஜெர்சியுடன் களமிறங்குகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.

அண்மையில், நடந்து முடிந்த 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது.

Indian cricket team, இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கோப்பையை வென்ற உற்சாகத்தில் இந்திய டெஸ்ட் அணி வீரர்கள். (Image: AP)


இதனை அடுத்து, இரு அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (ஜன.12) தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Dhoni Practice, தோனி, வலைப்பயிற்சி
வலைப் பயிற்சியில் தோனி. (BCCI)


இந்நிலையில், ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி, 1980-களில் பயன்படுத்திய அதே நிறத்திலான ஜெர்சியுடன் களமிறங்க இருப்பது தெரியவந்துள்ளது. தொடருக்கு முன்னதாக குழு புகைப்படம் எடுக்கும்போது, சுமார் 33 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய அதே நிறத்திலான ஜெர்சியில் களமிறங்க உள்ளது.
Loading...
Australia Team Old Jersey, ஆஸ்திரேலிய அணி
1980-ல் விளையாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. (Cricket Australia)


தங்க நிறத்துடன் சிறிது பச்சை கலந்த ஜெர்சியில் ஆஸ்திரேலிய அணி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.ஆஸ்திரேலிய அணியைப் போல், இந்திய அணியும் பழைய ஜெர்சியை பயன்படுத்துமா என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தோனியின் பயிற்சியைப் பார்க்க வந்த 87-வயது மூதாட்டி!

Also Watch...

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...