வெற்றிப்பாதையில் இந்தியா! மோசமான தோல்வியின் பிடியில் ஆஸி.

வெற்றிப்பாதையில் இந்தியா! மோசமான தோல்வியின் பிடியில் ஆஸி.

இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி சற்று முன் வரை 4 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

  • Share this:
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் 131 ரன்கள் முன்னிலை பெற்று 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா அணி சற்று முன் வரை 6 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

இதனையடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்து வீச்சில் மிரண்டு போயுள்ளது. ஆஸி.யினர் பந்து வீச்சில் திணறி வரும் வேளையில் இந்தியப் பந்து வீச்சு அற்புதமாக இருந்து வருகிறது.

இந்திய அணியில் இத்தனைக்கும் உமேஷ் யாதவ் 3.3 ஓவர்கள் வீடி பாதியிலேயே காயம் காரணமாக வெளியேறி விட்டார். ஒரு பவுலர் இந்திய அணிக்குக் குறைவு.

உமேஷ் யாதவ் ஆஸ்திரேலிய இரண்டாவது இன்னிங்சில் ஜோ பர்ன்ஸை அட்டகாசமான பந்தில் வீழ்த்தினார். பந்து ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் ஆகி சற்றே லேட் ஸ்விங் ஆக மட்டையை பந்து தானாகவே தொட்டுச் சென்றது பந்த் கேட்ச் ஆக்கினார். அவுட் என்று தெரிந்தும் ஒரு ரிவியூவையும் விரயம் செய்து விட்டுப் போனார் ஜோ பர்ன்ஸ்.

லபுஷேன், மேத்யூ வேட் சிலபல பதற்றமான தருணங்களுடன் ஸ்கோரை 42 ரன்களுக்கு உயர்த்தினர். லபுஷேன் ரிவியூவில் இருமுறை எல்.பி.யிலிருந்து தப்பினார். கடைசியில் 28 ரன்கள் எடுத்து நன்றாக ஆடி வந்த நிலையில் அடிலெய்டில் ஸ்மித்தை வீழ்த்தியது போலவே மிடில் அண்ட் ஆஃப் ஸ்டம்பில் வீசினார், பந்து ஆஃப் ஸ்பின் ஆகும் என்று லபுஷேன் எதிர்பார்த்த நிலையில் அவருக்குக் குறுக்காக சென்றது பந்து அற்புதமான ஒருபந்து அதனைத் தொட்டார் லபுஷேன், அதனால் கெட்டார், மீண்டும் ரஹானே கேட்சை எடுத்தார்.

ஸ்டீவ் ஸ்மித் அஸ்வினுக்கு எதிராக சிலபல பதற்றமான தருணங்களை எதிர்கொண்டார். அவர் உடல் மொழி பழைய ஸ்மித் என்பதாக இல்லை. 30 பந்துகளைச் சந்தித்த ஸ்டீவ் ஸ்மித் 8 ரன்களில் பும்ரா பந்தில் பவுல்டு ஆனார். அவர் எப்போதும் ஷஃபுல் செய்து ஆஃப் ஸ்டம்புக்குச் சென்று விடுவார் இம்முறையும் அப்படித்தான் சென்றார், அப்படி ஆடி பந்தை லெக் திசையில் ஆடுவது அவர் வழக்கம் ஆனால் இது அபாயகரமானது, பந்தை விட்டு விட்டால் ஸ்டம்புதான், இம்முறையும் அப்படித்தான் ஆனது. பவுல்டு ஆனது குறித்து ஸ்மித்துக்கே திகைப்புத்தான்.

ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இலக்கைத்தை எட்டாமல் அவுட் ஆவது இது இரண்டாவது முறையாகும்.

மேத்யூ வேட் 137 பந்துகளைச் சந்தித்து 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்திருந்த போது சற்று முன் ஜடேஜா பந்தில் எல்.பி.ஆனார். அவர் நகர்ந்து வந்து லெக் திசையில் ஆட முயன்றார் பந்து கால்காப்பைத் தாக்கியது பந்து கால்காப்பைத் தாக்கிய போது அவரது லெக் ஸ்டம்ப் தெரிந்தது, அவுட், ரிவியூ செய்து விரயம் செய்து விட்டுப் போனார்.

ட்ராவிஸ் ஹெட் 17 ரன்களில் முகமது சிராஜ் பந்தை தொட்டார் எட்ஜ் ஆகி 2வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். கேப்டன் டிம் பெய்ன் வந்ததும் தெரியவில்லைப் போனதும் தெரியவில்லை. 1 ரன்னில் ஜடேஜாவின் ஸ்பின் ஆகி எழும்பிய பந்துக்கு கட் செய்ய முயன்று கேட்ச் ஆனார். ரிவியூவும் பயனளிக்கவில்லை.  கேமரூன் கிரீன் ரன் ல் எடுக்காமல் கிரீசில் உள்ளார், கமின்ஸ் 2 ரன்களுடனும் ஆடிவருகிறார்.

சிராஜ், பும்ரா, அஸ்வின் ஜடேஜா என்று அனைவரும் அசத்தலாக வீசி வருகின்றனர், இன்று 17 ஓவர்கள் மீதமுள்ளன. இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க ஆஸி.க்குத் தேவை இன்னும் 29 ரன்கள்.
Published by:Muthukumar
First published: