முகப்பு /செய்தி /விளையாட்டு / சிராஜ் அபாரம்! இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 70 ரன்கள்-தொடரில் முதல் முதலாக 200 எட்டிய ஆஸி.

சிராஜ் அபாரம்! இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 70 ரன்கள்-தொடரில் முதல் முதலாக 200 எட்டிய ஆஸி.

இந்திய வெற்றி இலக்கு 70 ரன்கள்.

இந்திய வெற்றி இலக்கு 70 ரன்கள்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று ஆஸ்திரேலியா அணி தன் 2வது இன்னிங்சில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 70 ரன்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று ஆஸ்திரேலியா அணி தன் 2வது இன்னிங்சில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 70 ரன்கள்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் முடிந்தவரை இந்திய வெற்றியைத் தாமதப்படுத்தினர் ஆஸ்திரேலிய பின்வரிசை பேட்ஸ்மென்கள். கேமரூன் கிரீன் அபாரமாக ஆடினார் ஆனால் நீடிக்கவில்லை. முகமது சிராஜ் அற்புதமாக வீசினார். இன்று விழுந்த 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகள் வேகப்பந்து வீச்சின் ஷார்ட் பிட்ச் பந்துகளில்.

இந்திய பவுலர்கள் அற்புதமாக வீசியதில் 2 முறை தவறான ரிவியூக்களுக்குச் செல்ல நேரிட்டது, இதனால் இருமுறையும் ரிவியூவை இழந்தது.

ஆஸ்திரேலியா இப்படி ஆடி பார்த்ததில்லை. 200 ரன்களுக்கு 103.1 ஓவர்கள் ஓவருக்கு 2 ரன்களுக்கும் குறைவு என்ற விகிதத்தில் எடுக்கின்றனர் என்றால் இந்திய பந்து வீச்சு எப்படி ஆஸ்திரேலியாவை நசுக்கிப் பிழிகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

காலையில் பழைய பந்தில் விக்கெட்டுகள் விழவில்லை, அஸ்வின் முதலில் வேகமாக வீசியவர் பிறகு பந்தை மெதுவாகத் தூக்கி வீசினார் இதனையடுத்து பீட்டன் ஆகத் தொடங்கினர். பும்ரா ஃபுல் லெந்த், ஷார்ட் பிட்ச், யார்க்கர்கள் என்று மாற்றி மாற்றி வீசினார்.

சுமார் 35 ஓவர்களை ஆடிய கேமரூன் கிரீன், பாட் கமின்ஸ் 57 ரன்களைச் சேர்த்து இந்திய வெற்றியைத் தாமதப்படுத்தி வெறுப்பேற்றினர். கமின்ஸ் 121 பந்துகள் நின்றார் 22 ரன்கள் எடுத்து இன்று புதிய பந்து எடுத்தவுடன் பும்ராவின் நல்ல திசையில் வீசப்பட்ட ஷார்ட் பிட்ச் பவுன்சரில் தொண்டைக்குழிக்கு வந்த பந்தை தாறுமாறாகத் தடுக்க எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் மயங்க் அகர்வால் கையில் தஞ்சமடைந்தது.

கேமரூன் கிரீன் 146 பந்துகள் நின்று 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட் ஆட அது அருகிலேயே மிட்விக்கெட்டில் ஜடேஜாவின் கேட்சாக முடிந்தது, அந்த இடத்தில் பீல்டரை நிறுத்திய ரஹானேவுக்குத்தான் பாராட்டுக்கள் செல்ல வேண்டும்.

மிட்செல் ஸ்டார்க் சிலபல பதற்றமான தருணங்களுடன் 14 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, நேதன் லயன் 3 ரன்களில் சிராஜின் பவுன்சருக்கு பந்த்திடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ஹேசில்வுட் 10 ரன்கள் சேர்த்து அஸ்வின் பந்தில் பவுல்டு ஆனார். லெக் அண்ட் மிடில் ஸ்டம்புக்கு வந்த பந்தை ஆடாமல் விட்டு பவுல்டு ஆனார். ஆஸ்திரேலியா 200 ரன்களை முதன் முதலில் இந்தத் தொடரில் எட்டியது.

இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 70 ரன்கள். இந்தியத் தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அறிமுக மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அஸ்வின், ஜடேஜா, பும்ரா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

First published:

Tags: India vs Australia, Melbourne