பும்ராவை முந்திய அஸ்வின்; நம்பர் 1 இடத்தில் ஸ்மித்தை நெருங்கும் விராட் கோலி

பும்ராவை முந்திய அஸ்வின்; நம்பர் 1 இடத்தில் ஸ்மித்தை நெருங்கும் விராட் கோலி

அடிலெய்ட் டெஸ்ட் தோல்வியிலும் ஆறுதல் தரும் செய்தியாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை ஐசிசி பேட்டிங் தரவரிசையில் நெருங்கி வருகிறார் விராட் கோலி.

அடிலெய்ட் டெஸ்ட் தோல்வியிலும் ஆறுதல் தரும் செய்தியாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை ஐசிசி பேட்டிங் தரவரிசையில் நெருங்கி வருகிறார் விராட் கோலி.

 • Share this:
  அடிலெய்ட் டெஸ்ட் தோல்வியிலும் ஆறுதல் தரும் செய்தியாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை ஐசிசி பேட்டிங் தரவரிசையில் நெருங்கி வருகிறார் விராட் கோலி.

  ஆனால் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி, இல்லை, ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து ஆடுவதால் ஸ்மித் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கவே வாய்ப்பு அதிகம்.

  அடிலெய்ட் டெஸ்ட் முதல் இன்னிங்சில் விராட் கோலி அதியற்புதமான இன்னிங்சை ஆடி 74 ரன்களை எடுத்து ரஹானேவின் தவறான ரன் அழைப்புக்கு இலக்காகி வெறுப்புடன் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

  இந்த இன்னிங்ஸ் மூலம் கூடுதல் தரவரிசைப் புள்ளிகளைச் சேர்த்துக் கொண்டார் கோலி, மாறாக ஸ்டீவ் ஸ்மித் முதல் இன்னிங்சில் அஸ்வினின் அதியற்புதமான பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் ஆகி 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார், 2வது இன்னிங்சில் வெற்றி பெறும் போது இறங்கியதால் 1 ரன் நாட் அவுட் என்று ஸ்மித் முடிந்தார். இதனையடுத்து அவர் 10 புள்ளிகளை இழக்க நேரிட்டது.

  Virat Kohli, Cricket Australia
  விராட் கோலி


  இதனையடுத்து கோலிக்கும் இவருக்குமான இடைவெளி 25 புள்ளிகளிலிருந்து 13 புள்ளிகளாகக் குறைந்தது. மார்னஸ் லபுஷேன் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 47 மற்றும் 6 ரன்களை எடுத்ததையடுத்து அவரது தரவரிசைப் புள்ளிகள் 839 ஆக அதிகரித்துள்ளது.

  ஆஸ்திரேலிய கேப்டன் 73 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தது ஆஸி. வெற்றியில் பங்களிப்பு செய்ததால் அவர் ஐசிசி தரவரிசையில் 33வது இடத்துக்கு முன்னேறினார். 592 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

  பந்துவீச்சு தரவரிசையில் பாட் கமின்ஸ் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 910 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 2-ம் இடம் வகிக்கிறார்.

  8 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஜோஷ் ஹேசில்வுட் 4 இடங்கள் முன்னேறி டாப் 10-ல் 5ம் இடத்திற்கு வந்துள்ளார். இவரது தரவரிசைப் புள்ளிகள் 805.

  அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அபாரமாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் 9ம் இடத்துக்கு முன்னேறி பும்ராவை பின்னுக்குத் தள்ளினார்.

  டாப் 10 பேட்ஸ்மென்கள்: ஸ்மித், கோலி, வில்லியம்சன், லபுஷேன், பாபர் ஆஸம், டேவிட் வார்னர், பென் ஸ்டோக்ஸ், புஜாரா, ரூட், டாம் லேதம்

  டாப் 10 பவுலர்கள்: பாட் கமின்ஸ், பிராட், நீல் வாக்னர், டிம் சவுத்தி, ஹேசில்வுட், ரபாடா, ஸ்டார்க், ஆண்டர்சன், அஸ்வின், பும்ரா
  Published by:Muthukumar
  First published: