இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி நடைபெற இருக்கும் ராஞ்சி கிரிக்கெட் மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற தகவலைப் பார்க்கலாம்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முழுவதுமாக கைப்பற்றியது.
இதனை அடுத்து தொடங்கிய ஒரு நாள் தொடரில், முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)
இரு அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நாளை (மார்ச் 8) நடைபெற உள்ளது. அண்மையில் இந்த மைதானத்தின் பெவிலியனுக்கு தோனியின் பெயர் வைக்கப்பட்டது.
ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த இந்த மைதானத்தில் சுமார் 50,000 பேர் அமர்ந்து போட்டியைக் கண்டு ரசிக்கலாம். இந்த மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மூன்று முறை மோதியுள்ளன.
வெற்றியின் அடிப்படையில் 1-0 என்ற கணக்கில் இந்தியாவுக்குச் சாதமாகவே இருக்கிறது. 2017-ல் இங்கு நடந்த டி-20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. டெஸ்ட் போட்டி டிரா ஆனது. ஒரு நாள் போட்டி கைவிடப்பட்டது.
இந்திய அணி, ஒட்டுமொத்தமாக 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. 2013-ல் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 295 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோர். இந்திய அணியைப் பொறுத்தவரை 7 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்து இருந்தது.
இந்த மைதானத்தில் தனி அதிகபட்சமாக, விராட் கோலி 3 இன்னிங்சில் விளையாடி 261 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். கோலி, இலங்கை வீரர் மேத்யூஸ் ஆகியோர் ஒரு ஆட்டத்தில் அதிகபட்சமாக தலா 139 ரன்கள் குவித்துள்ளனர். பந்துவீச்சில் அஸ்வின் 3 போட்டியில் விளையாடி 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
புள்ளி விவரங்கள் இந்தியாவுக்குச் சாதகமாக இருந்தாலும், இங்கு குறைந்த அளவிலான போட்டிகளே விளையாடப்பட்டுள்ளன. அதனால், இதை வைத்து மட்டும் வெற்றி தோல்வியை கணிப்பது கடினம்.
VIDEO: மேக்ஸ்வெல்லை அவுட்டாக்க தோனி கொடுத்த சூப்பர் ஐடியா!
VIDEO: வீரர்களை தனது விலையுயர்ந்த காரில் அழைத்துச் சென்ற தோனி!
கடைசி ஓவர் வீசுவதைவிட ஹிந்தி பேசுவதுதான் கடினம் - விஜய் சங்கர் ஓபன் டாக்!
Also Watch...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.