HOME»NEWS»SPORTS»cricket india vs australia akhtar praises indian team character under rahane mut

ஆஸி.யை இந்திய அணி பந்தாடும் என்று நான் கூறும்போது பலரும் கேலி செய்தனர்: ரஹானே படையை பாராட்டித் தள்ளிய அக்தர்

நான் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியைப் பார்க்க அன்று கண் விழித்த போது தூக்கக்கலக்கத்தில் 36/9 என்று இருந்ததை 369 என்று படித்து விட்டேன்.

ஆஸி.யை இந்திய அணி பந்தாடும் என்று நான் கூறும்போது பலரும் கேலி செய்தனர்: ரஹானே படையை பாராட்டித் தள்ளிய அக்தர்
ஷோயப் அக்தர்.
  • Share this:

அஜிங்கிய ரஹானே தலைமை இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் டிராபியை தக்கவைக்கும் என்று ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.

அடிலெய்ட் பெருந்தோல்விக்குப் பிறகு அபாரமாக புத்தெழுச்சி பெற்ற இந்திய அணி ரஹானே தலைமையில் அபாரப் பந்து வீச்சில் ஆஸி.யை பந்தாடி தொடரை 1-1 என்று சமன் செய்தது.

இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் டுடேவுக்கு ஷோயப் அக்தர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:



ஆஸ்திரேலியாவை இந்திய அணி பந்தாடும் என்று டெல்லியில் சில நண்பர்களிடம் நான் கூறிய போது நான் மிகைப்படுத்துகிறேன் என்று என்னை கேலி செய்தனர். நான் அப்போதே கூறேனேன், பேட்டிங் நன்றாக ஆடினால், மிடில் ஆர்டர் சோபித்தால் இந்திய அணி தொடரை வெல்லும் வாய்ப்பு உள்ளது என்றுதான் நான் அப்போதும் கூறினேன் இப்போதும் கூறுகிறேன்.

நான் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியைப் பார்க்க அன்று கண் விழித்த போது தூக்கக்கலக்கத்தில் 36/9 என்று இருந்ததை 369 என்று படித்து விட்டேன். ஆனால் மெல்போரினில் இந்திய அணி போராட்டக்குணத்தை வெளிப்படுத்தி பிரமாதமாக வென்றது. ரஹானே மிகவும் அமைதியானவர். ரஹானே சப்தம் போடுவதோ, அல்லது மைதானத்தில் அசிங்கமாக நடந்து கொள்வதோ இல்லை.

மிகவும் கூலாக ஆனால் ஆக்ரோஷமாக கேப்டன்சி செய்கிறார். இவரது தலைமையில் திடீரென அனைவரும் நன்றாக ஆடுகின்றனர்.

ரவிசாஸ்திரி, ரஹானே என்று நாம் எப்போது பேசினாலும் இந்திய அணியின் பலம் களத்தில் ஆடுபவர்களல்ல, பெஞ்ச் பலம்தான் இந்திய அணியின் பலம். ஒரு டெஸ்ட்டில் படு உதை அடுத்த டெஸ்ட்டே எழுச்சி பெற்று வென்றிருப்பது இந்திய அணியின் கேரக்டரைக் காட்டுகிறது.

ரஹானே, பும்ரா, கில், ஜடேஜா முக்கியப் பங்காற்றுகின்றனர்.

10-15 ஆண்டுகளுக்கு முன்பாக எந்த ஒரு துணைக்கண்ட அணியும் ஆஸ்திரேலியாவில் அந்த அணியை போட்டு சாத்தும் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இப்போது இது நடக்கிறது. இந்தியா தொடரை வெல்ல வேண்டும் ஏனெனில் பெரிய அளவில் புத்தெழுச்சி பெற்று வெற்றி பெற்றுள்ளனர். தைரியமாகவும் உறுதியுடனும் இந்திய அணி ஆடுகின்றனர். ரஹானே சதம்தா திருப்பு முனை, இவ்வாறு கூறினார் அக்தர்.

சிட்னி டெஸ்ட் போட்டிக்கு ரோஹித் சர்மா வருகை பலம் சேர்த்துள்ளது. 7ம் தேதி சிட்னி டெஸ்ட் தொடங்குகிறது.
Published by:Muthukumar
First published: