10 ஆண்டுகால சாதனையை தகர்க்குமா ஆஸ்திரேலியா?

#IndvAus 5th ODI statistical preview | 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 2-2 என சமனில் உள்ளது.

10 ஆண்டுகால சாதனையை தகர்க்குமா ஆஸ்திரேலியா?
டாஸ் போடும் கேப்ப்டன்கள் ஆரோன் பிஞ்ச் மற்றும் விராட் கோலி. (Cricket Australia)
  • Share this:
டெல்லியில் நடைபெறும் இறுதி ஒரு நாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாதனை படைக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ராஞ்சி மற்றும் மொஹாலியில் நடந்த 3-வது, 4-வது போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதன்மூலம், ஒரு நாள் தொடர் 2-2 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் இறுதி ஒரு நாள் போட்டி டெல்லியில் இன்று (மார்ச் 13) நடைபெற உள்ளது.
Loading...இரு அணிகளுமே இந்தப் போட்டியில் வெற்றிபெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். இந்த போட்டிக்கான வெற்றி தொடரை மட்டும் தீர்மானிப்பதில்லை. 10 ஆண்டுகளாக இந்தியா கட்டிக்காத்த சாதனையும் உள்ளது.

2015-ம் ஆண்டுக்குப் பின்னர், இந்திய அணி சொந்த மண்ணில் தொடரை இழந்தது கிடையாது. அதேபோல், 2009-ம் ஆண்டில் இருந்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் ஒரு நாள் தொடரை இழந்தது இல்லை.

Australia Team, ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. (CricketAustralia)


இந்திய அணி தனது சாதனையை தக்க வைக்கவும், ஆஸ்திரேலிய அணி புதிய சாதனை படைக்கவும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Watch...

First published: March 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...