நாளை இறுதிப்போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?

#IndvAus: 5th and final ODI match on tomorrow | 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் தாலா 2 போட்டிகளைக் கைப்பற்றியதால் தொடர் சமனில் உள்ளது.

நாளை இறுதிப்போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?
டாஸ் போட வந்த பிஞ்ச் மற்றும் விராட் கோலி. (Cricket Australia)
  • News18
  • Last Updated: March 12, 2019, 8:43 PM IST
  • Share this:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.

5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் தாலா 2 போட்டிகளைக் கைப்பற்றியதால் தொடர் சமனில் உள்ளது.


Indian Team, இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)


ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடந்த 2-வது போட்டியில் 8 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்து நடந்த 3-வது மற்றும் 4-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நாளை (மார்ச் 13) நடைபெற உள்ளது.

Loading...

India Loss, இந்திய அணி தோல்வி
இந்திய அணி தோல்வி. (AP)


இந்திய அணியைப் பொறுத்தவரை, ஷிகர் தவான் ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி, விஜய் சங்கர் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கின்றனர். நாளைய ஆட்டத்தில் பந்துவீச்சில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. முகமது ஷமியை உள்ளே இறக்க வாய்ப்புள்ளது.

இந்திய உத்தேச லெவன் அணி: ஷிகர் தவான், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், கேதர் ஜாதவ், விஜய் சங்கர், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார் அல்லது முகமது ஷமி.

ஆஸ்திரேலிய அணி, டி-20 தொடரை வென்றதுபோல், ஒரு நாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் உள்ளது. இறுதி ஒரு நாள் போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது.

சி.எஸ்.கே போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு: சென்னை ரசிகர்கள் உற்சாகம்!

பஞ்ச் நாயகனுக்கே... பஞ்ச் கொடுத்த ஹர்பஜன்!

இந்திய அணியின் பாதி கேப்டன் தோனி... மீதிதான் கோலி: முன்னாள் கிரிக்கெட் வீரர்!

ஐபில் போட்டி பாகிஸ்தானில் நடக்கும்: உலறிய பாகிஸ்தான் வீரரை கலாய்த்த நெட்டிசன்கள்

Also Watch...

First published: March 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...