Home /News /sports /

சிட்னி டெஸ்ட்: 4 கேப்டன்களின் சாதனையைத் தகர்ப்பாரா கோலி?

சிட்னி டெஸ்ட்: 4 கேப்டன்களின் சாதனையைத் தகர்ப்பாரா கோலி?

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. (BCCI)

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. (BCCI)

Virat Kohli on verge of breaking four captaincy records | இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (03.01.19) தொடங்குகிறது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 4 கேப்டன்களின் சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (03.01.19) தொடங்குகிறது.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்தது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை இந்தியா வென்றதில்லை என்று இருந்ததை, விராட் கோலியின் படை மாற்றி எழுதியது. பெர்த் டெஸ்டில் தோல்வி அடைந்தாலும், மெல்போர்ன் டெஸ்டில் புஜாரா மற்றும் பும்ராவின் சிறப்பான ஆட்டதால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

BCCI, Indian Team Celebration
மெல்போர்னில் வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள். (BCCI)


சிட்னியில் நடைபெறும் 4-வது மற்றும் கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. கடைசி டெஸ்டில் டிரா செய்தாலே போதும் இந்திய அணி தொடரை வென்றுவிடும். தொடரை வென்றால் 76 ஆண்டுகால இந்திய டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை கோலி பெறுவார்.

Indian Team, கோலி
வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன் கோலி. (BCCI)


1977-78-ல் பிஷன் சிங் பேடி தலைமையிலான இந்திய அணி 2-3 என தொடரை இழந்தது. 2003-04-ல் கங்குலி தலைமையிலான இந்திய அணி, 1-1 என தொடரை டிரா செய்தது. சிட்னி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால், வெளிநாட்டு மண்ணில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 2 தொடர்களைக் கைப்பற்றியை முதல் இந்திய கேப்டன் என்ற கவுரவமும் கோலிக்கு கிடைக்கும். முன்னதாக, 2017-ல் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்று கோலி வரலாறு படைத்தார்.

Indian Test Team, இந்திய வீரர்கள்
வெற்றியைக் கொண்டாடும் இந்திய வீரர்கள். (BCCI)


ஆசிய கண்டத்தைத் தாண்டி, 1967-68-ல் நியூசிலாந்தில் மன்சூர் அலி கான் தலைமையிலான இந்திய அணி 3-1 என டெஸ்ட் தொடரை வென்றது. அதன்பிறகு, 50 ஆண்டுகளுக்கு மேல் யாரும் முறியடிக்காத இந்தச் சாதனையையும் விராட் கோலி தகர்க்க இருக்கிறார். அத்துடன், ஆஸ்திரேலிய மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறந்த ஆசியக் கேப்டன்கள் பட்டியலில் கோலி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Watch...

Published by:Murugesan L
First published:

Tags: Captain Virat Kohli, Ind Vs Aus, India vs Australia 2018, Sourav Ganguly

அடுத்த செய்தி