விருத்திமான் சஹா வீட்டுக்குப் போகலாம்.. ரிஷப்-ஐ கொண்டாடும் ரசிகர்கள்!

Is it the end road for Wriddhiman Saha? | விக்கெட் கீப்பராக 11 சாதனைகள் படைத்த ரிஷப் பண்ட்-ஐ இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விருத்திமான் சஹா வீட்டுக்குப் போகலாம்.. ரிஷப்-ஐ கொண்டாடும் ரசிகர்கள்!
விருத்திமான் சஹா மற்றும் ரிஷப் பண்ட்
  • News18
  • Last Updated: January 4, 2019, 9:09 PM IST
  • Share this:
சிட்னியில் சதமடித்து சாதனை படைத்த ரிஷப் பண்டை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் அபார சதத்தால், 622 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை இந்திய அணி டிக்ளேர் செய்தது.

21 வயதேயான இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 2-வது சதத்தையும், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் சதத்தையும் பதிவு செய்தார். அத்துடன், பல்வேறு உலக சாதனைகளைப் படைத்து கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.


Rishabh Pant, ரிஷப் பண்ட்,
ஒரே சதத்தில் பல சாதனைகளை செய்த ரிஷப் பண்ட். (Twitter)


ஒட்டுமொத்தமாக, விக்கெட் கீப்பராக 11 சாதனைகள் படைத்த ரிஷப் பண்ட்-ஐ இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இவரது வளர்ச்சி அவருக்கு இடையூறாக இருக்க வாய்ப்பில்லை.

ஆனால், காயத்தால் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்காத விருத்திமான் சஹாவுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரிஷப் பண்ட்-க்கு முன்னதாக டெஸ்ட் அணியில் சஹா இந்திய அணியில் அறிமுகம் ஆகிவிட்டார். இருந்தாலும், தன்னுடைய அசாத்திய சாதனைகளால் ரிஷப் பண்ட் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
Rishabh Pant, ரிஷப் பண்ட்
சர்வதேச டெஸ்ட் அரங்கில் 2-வது சதத்தை பதிவு செய்தார் ரிஷப் பண்ட். (BCCI)


ரிஷப் பண்ட் செய்த சாதனைகள் விருத்திமான் சஹாவை வீட்டுக்கு அனுப்ப வழிசெய்யும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிட்னி டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்து இந்திய அணி இமாலய ரன்கள் குவிப்பு!

Also Watch...

First published: January 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading