சிட்னி டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி இமாலய ரன்கள் குவிப்பு!

சதம் அடித்த ரிஷப் பண்டை பாராட்டும் ஜடேஜா. (BCCI)

#SydneyTest: The Indian innings ends at a whopping 622/7 | புஜாரா, ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினர். #RishabhPant #AUSvIND

 • News18
 • Last Updated :
 • Share this:
  சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி இமாலய ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

  இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவில் 2 - 1 என இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் மீண்டும் சொதப்பியதால் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

  அடுத்த வந்த இந்திய அணியின் தடுப்புச் சுவர் மற்றும் ஆபத்பாண்டவன் புஜாரா, மற்றொரு தொடக்க வீரர் மயங் அகர்வாலும் ஜோடி சேர்ந்தார். அறிமுக டெஸ்ட் தொடரில் 2-வது அரைசதத்தைப் பதிவு செய்த மயங், 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 23 ரன்களிலும், ரகானே 18 ரன்களிலும் அவுட்டாகினர்.

  Mayank Agarwal, மயங் அகர்வால்
  சர்வதேச டெஸ்ட் அரங்கில் மயங் அகர்வால் தனது 2-வது டெஸ்ட் அரைசதத்தை அடித்தார். (AP)


  புஜாரா, தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 18-வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். 199 ரன்களைச் சந்தித்து தொடர்ந்து 3-வது சதத்தை அடித்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது. புஜாரா 130 ரன்களுடனும், விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

  புஜாரா, Pujara
  சிட்னி டெஸ்டில் புஜாரா தனது 18-வது டெஸ்ட் சதத்தை அடித்தார். (BCCI)


  2-ம் நாள் ஆட்டத்தில் விஹாரி 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா 193 ரன்கள் எடுத்து இரட்டை சதத்தை தவறிவிட்டார். பின்னர் ரிஷப் பண்ட், ஜடேஜா ஜோடி ரன்களை வேகமாக சேர்த்தது. ரிஷப் பண்ட் டெஸ்ட் அரங்கில் தனது 2-வது சதத்தையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் சதத்தையும் அடித்தார். ஜடேஜாவும் அரைசதம் அடித்தார்.

  Rishabh Pant, ரிஷப் பண்ட்
  சர்வதேச டெஸ்ட் அரங்கில் 2-வது சதத்தை பதிவு செய்தார் ரிஷப் பண்ட். (BCCI)


  இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ரிஷப் பண்ட் 159 ரன்களுடனும், ஜடேஜா 81 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

  பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தபோது, 2-ம் நாள் ஆட்டநேரம் முடிந்தது. கவாஜா 5 ரன்களுடனும், மார்கஸ் ஹேரிஸ் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

  Also Watch...

  Published by:Murugesan L
  First published: