Home /News /sports /

சிட்னி டெஸ்ட்: முதல் நாளிலேயே 300 ரன்களைக் கடந்த இந்தியா

சிட்னி டெஸ்ட்: முதல் நாளிலேயே 300 ரன்களைக் கடந்த இந்தியா

ஆஸி. பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட மயங் அகர்வால் மற்றும் புஜாரா. (BCCI)

ஆஸி. பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட மயங் அகர்வால் மற்றும் புஜாரா. (BCCI)

Pujara And Vihari Take India to 303 | சிட்னியில் புஜாரா தனது 18-வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.

  • News18
  • Last Updated :
சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாளிலேயே 300 ரன்களைக் கடந்து அசத்தியது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று (ஜன.3) தொடங்கியது. முதல் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவில் 2 - 1 என இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்டில் இந்திய அணி டிரா செய்தாலே ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்று புதிய சரித்திரம் படைக்க முடியும்.

India Vs Australia, சிட்னி
சிட்னியில் டாஸ் போடும் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன்கள். (BCCI)


டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மயங் அகர்வால், கே.எல்.ராகுல் இறங்கினர்.

கே.எல்.ராகுல் மீண்டும் சொதப்பல்

அடிலெய்ட், பெர்த் ஆகிய முதல் இரண்டு டெஸ்டில் சொதப்பிய கே.எல்.ராகுல், மீண்டும் சொதப்பினார். அவர், வெறும் 9 ரன்னில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஷேன் மார்ஷ் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாராவும், மயங் அகர்வாலும் நிதானமாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர்.

மயங் அகர்வால், Mayank Agarwal
அரைசதம் அடித்து அசத்திய மயங் அகர்வால். (BCCI)


அறிமுக டெஸ்ட் தொடரில் 2-வது அரைசதத்தைப் பதிவு செய்த மயங் அகர்வால், 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 23 ரன்கள் எடுத்து, ஹேசில்வுட் வேகத்தில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சதம் அடிப்பேன் என்று சவடால் விட்ட ரகானே

மெல்போர்னில் சதம் அடிப்பேன் என்று சவடால் விட்ட துணைக் கேப்டன் ரகானே அரைசதம் கூட அடிக்காமல் ஆட்டமிழந்தார். அதேபோல், சிட்னியிலும் 18 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்டார்க் வீசிய பவுன்சரில் விக்கெட்டை பறிகொடுத்தார். கே.எல்.ராகுல் போலவே இவரும் தொடர்ந்து சொதப்புவது இந்திய அணிக்கு ஆரோக்கியமானதாக இருக்காது.



இந்திய அணிக்கு கைகொடுத்த புஜாரா

அடுத்து வந்த புஜாரா, தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 18-வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். 199 ரன்களைச் சந்தித்து தொடர்ந்து 3-வது சதத்தை அடித்தார். புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி முதல் நாளில் 300 ரன்களைக் கடந்தது.



முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது. புஜாரா 130 ரன்களுடனும், விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Also Watch...

Published by:Murugesan L
First published:

Tags: Ind Vs Aus, India vs Australia, Sydney, Virat Kohli

அடுத்த செய்தி