Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு… கம்மின்ஸ் தலைமையில் வீரர்கள் தயார்…

இந்திய டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு… கம்மின்ஸ் தலைமையில் வீரர்கள் தயார்…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி

டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவிக்கும் ஆஸ்திரேலிய அணி, உலக டெஸ்ட் சாம்பியன் தொடருக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவுடனான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரும் பாட் கம்மின்ஸ் கேப்டனாக நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த சூழலில் இரு அணிகளும் பங்கேற்கும் டெஸ்ட் போட்டிகள் முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில், 2-இல் வெற்றி பெற்று தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெறவிருந்த நிலையில் மழை காரணமாக, ஆட்டம் டிராவில் முடிந்தது.

டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவிக்கும் ஆஸ்திரேலிய அணி, உலக டெஸ்ட் சாம்பியன் தொடருக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரம் டாட் மர்ஃபி அணியில் இடம்பெற்றுள்ளார். அவருடன் மற்றொரு முக்கிய ஸ்பின்னரான நாதன் லியோனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மூத்த பேட்ஸ்மேன் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்பிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முக்கிய ஆட்டக்காரர்களான கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயம் காரணமாக ஓய்வில் உள்ளனர். அவர்களது பெயரும் அணியில் இடம்பெற்றுள்ளது. உள்ளூரில் பெற்ற வெற்றிக்கு பின்னர் இந்திய டெஸ்டிலும் வெற்றிகளை தொடர்வதற்காக, சிறப்பான வீரர்களை தேர்வு செய்துள்ளோம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்கு தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘வலது – இடது கை பேட்ஸ்மேன்கள், 4 ஸ்பின் ஸ்பெஷலிஸ்டுகள், 6 வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். டாட் மர்ஃபி சிறந்த விளையாட்டு வீரர். அவரது இணைப்பு அணிக்கு பலம் சேர்க்கும். சுழற்பந்து வீச்சில் சிறப்பாக விளையாடும் பீட்டர் ஹேண்ஸ்கோம்பும் அணியில் உள்ளார்’ என்று கூறினார்.

‘இந்தியாவுடனான தோல்விக்கு இந்த ஒரு விஷயம்தான் காரணம்’ - இலங்கை பயற்சியாளர் ஓபன் டாக்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாக்பூர், டெல்லி, தர்மசாலா, அகமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இந்த டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி –

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியான், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்டார்மிக், ஸ்டீவ் ஸ்மிக் , மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.

First published:

Tags: Cricket