இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நாளை ஆரம்பமாகிறது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. இதனால், முழு வலிமையுடன் இந்திய அணியின் வீரர்கள் நாளை களத்தில் இறங்கவுள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மா நல்ல ஃபார்மில் உள்ளார். முதல் டெஸ்டில் 120 ரன்களும், 2 ஆவது டெஸ்டில் மொத்தம் 63 ரன்களும் அவர் எடுத்துள்ளார். கே.எல்.ராகுல் 2 டெஸ்டிலும் சேர்த்து மொத்தமே 38 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதனால் அவர் நாளை நடைபெறவுள்ள டெஸ்டில் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடும் லெவனில் ரோஹித் சர்மா, விராட்கோலி, சுப்மன் கில், செதேஷ்வர் புஜாரா, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எஸ். பரத், ரவிந்திரா ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகம்மது ஷமி, முகம்மது சிராஜ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி விடும். அதேநேரம், டெஸ்டில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் ஆஸ்திரேலியா வெற்றிப் பாதைக்கு திரும்ப கடுமையாக போராடும் என்பதால் இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் ரோஹித் சர்மா மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவை தவிர்த்து சுழற்பந்து வீச்சாளர்களான ரவிந்திரா ஜடேஜா, அஷ்வின் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும்,டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் அணியாகும் வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket