முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்தியா – ஆஸி. இடையிலான 3ஆவது டெஸ்ட் இந்தூருக்கு மாற்றம்… பிசிசிஐ அறிவிப்பு…

இந்தியா – ஆஸி. இடையிலான 3ஆவது டெஸ்ட் இந்தூருக்கு மாற்றம்… பிசிசிஐ அறிவிப்பு…

இந்தூர் மைதானம்

இந்தூர் மைதானம்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மார்ச் 1ஆம் தேதி தொடங்குகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவிலிருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த போட்டி விசாகப்பட்டினம் அல்லது பெங்களூருவுக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிசிசிஐ இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அடுத்ததாக 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் இம்மாதம் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 3ஆவது போட்டி மார்ச் 1 ஆம் தேதி இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மைதானம் முழுமையாக தயாராகாத நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டி அங்கிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றப்படும் என்று  தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.  இந்நிலையில் 3ஆவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த போட்டி விசாகப்பட்டினம் அல்லது பெங்களுருவுக்கு மாற்றப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், இந்தூருக்கு மாற்றப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தர்மசாலா பகுதியில் நிலவும் குளிர்கால சூழலால், மைதானம் விளையாடுவதற்கு உகந்ததாக அமையவில்லை. மைதானத்தில் புற்களின் அடர்த்தி குறைவாக உள்ளது. இதனை சரி செய்வதற்கு சில நாட்கள் அதிகமாகும். இவற்றை கவனத்தில் கொண்டு 3ஆவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு மாற்றப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் போட்டி மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

First published:

Tags: Cricket