முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்தியா – ஆஸி. 3ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவிலிருந்து மாற்றப்படலாம் என தகவல்… விரைவில் முடிவை அறிவிக்கிறது பிசிசிஐ

இந்தியா – ஆஸி. 3ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவிலிருந்து மாற்றப்படலாம் என தகவல்… விரைவில் முடிவை அறிவிக்கிறது பிசிசிஐ

தர்மசாலா மைதானம்

தர்மசாலா மைதானம்

ஒருவேளை இங்கு ஆட்டம் நடைபெறாவிட்டால் பெங்களூரு அல்லது விசாகப்பட்டினத்திற்கு போட்டி மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலா மைதானத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை பிசிசிஐ சில நாட்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அடுத்ததாக 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் இம்மாதம் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 3ஆவது போட்டி மார்ச் 1 ஆம் தேதி இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மைதானம் முழுமையாக தயாராகாத நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டி அங்கிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றப்படும் என்று தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. இங்கு ஆட்டம் நடைபெற 16 நாட்கள் உள்ள நிலையில் மைதானத்தின் தன்மை குறித்து பிசிசிஐ அதிகாரிகள் இங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் விளையாடுவதற்கு ஏற்ற அளவில் மைதானம் இல்லை என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. தர்மசாலா மைதானம் குறித்து அறிக்கை விரைவில் பிசிசிஐயிடம் அளிக்கப்படவுள்ளது. இதன்பின்னர், போட்டி இந்த மைதானத்தில் நடைபெறுமா என்பது குறித்த முடிவை பிசிசிஐ அறிவிக்கும். ஒருவேளை இங்கு ஆட்டம் நடைபெறாவிட்டால் பெங்களூரு அல்லது விசாகப்பட்டினத்திற்கு போட்டி மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. வேகப்பந்து வீச்சுக்கு உகந்த மைதானமாக தர்மசாலா மைதானம் கருதப்படுகிறது.

First published:

Tags: Cricket