முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆஸி.க்கு எதிரான 3ஆவது டெஸ்டில் இந்திய அணி முதலில் பேட்டிங்… கே.எல். ராகுல் நீக்கம்

ஆஸி.க்கு எதிரான 3ஆவது டெஸ்டில் இந்திய அணி முதலில் பேட்டிங்… கே.எல். ராகுல் நீக்கம்

சுப்மன் கில்லுக்கு இந்த டெஸ்டில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

சுப்மன் கில்லுக்கு இந்த டெஸ்டில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில்லிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பந்து வீச்சாளர் ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் களத்தில் இறங்கவுள்ளார். ஆஸ்திரேலிய அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல் 2 டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட பேட் கம்மின்ஸ் சொந்த அலுவல் காரணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவருக்கு பதிலாக ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறிய டேவிட் வார்னருக்கு பதிலாக டேவிட் வார்னரும், கம்மின்ஸிற்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க்கும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்தியா வீரர்கள்: ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பரத் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்

ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் வீரர்கள் : உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவன் ஸ்மித்(கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், டோட் மர்பி, மேத்யூ குன்மன்.

First published:

Tags: Cricket