மெல்போர்ன் டெஸ்டில் 4-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற இன்னும் 141 ரன்கள் தேவைப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
புஜாரா (106), விராட் கோலி (82), ரோகித் சர்மா (63) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்னில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால், 151 ரன்களில் சுருண்டது. பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஆஸி.க்கு ‘பலோ ஆன்’ கொடுக்காமல், 296 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-ம் இன்னிங்சை தொடங்கியது. 3-ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தது.
4-ம் நாள் ஆட்டம் இன்று (29.12.18) தொடர்ந்த நிலையில், 8 விக்கெட்டுகளுக்கு 106 ரன்கள் எடுத்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதன்மூலம், 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.
தொடக்கவீரர்கள் பிஞ்ச் (3) மற்றும் ஹாரிஸ் (13) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கவாஜா (33), ஷேன் மார்ஷ் (44), மிச்செல் மார்ஷ் (10), டிராவிஸ் ஹெட் (34) ஆகியோர் சீரான இடைவெளியில் வெளியேறினர். ரன் சேர்க்க போராடிய கேப்டன் டிம் பெய்ன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார்.
Career-best bowling figures and career-best batting performance on the same day for Pat Cummins. What. A. Guy.#AUSvIND | @Domaincomau pic.twitter.com/fehlmLz1QF
— cricket.com.au (@cricketcomau) December 29, 2018
4-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. பேட் கம்மின்ஸ் 61 ரன்களுடனும், நாதன் லியோன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் ஒருநாள் மீதமுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 141 ரன்கள் தேவைப்படுகிறது.
That's stumps! Huge fight shown from Pat Cummins to take this to a fifth day.
India need two wickets.
Australia need 141 runs...
Scores: https://t.co/0glOblMnaq #AUSvIND pic.twitter.com/URTVNVSzGE
— cricket.com.au (@cricketcomau) December 29, 2018
இந்திய அணி வெற்றி பெற ஆஸ்திரேலியாவின் கடைசி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Also Watch...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.