Home » News » Sports » CRICKET INDIA VS AUSTRALIA 3RD T20I TODAY LAST MATCH VAI

IND vs AUS | இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இன்று கடைசி டி-20 போட்டி.. வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற இந்திய அணி முனைப்பு..

India vs Australia | இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

IND vs AUS | இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இன்று கடைசி டி-20 போட்டி.. வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற இந்திய அணி முனைப்பு..
IND vs AUS
  • Share this:

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டியில் பங்கேற்று வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்திலும், சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த 2-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.


இந்நிலையில், கான்பெர்ரா மைதானத்தில் இன்று மதியம் 1.40 மணிக்கு மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நடைபெறுகிறது. இதிலும் வெற்றி பெற்று தொடரை முற்றிலும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களம் இறங்குகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் காயமடைந்திருப்பது, இந்தியாவுக்கு பலத்தை அளித்துள்ள நிலையில், தமிழக வீரர் நடராஜன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.


மேலும் படிக்க...பெட்ரோல், டீசல் விலை ஏற்றமா இறக்கமா?


20 ஓவர் தொடரைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர், வரும் 17-ம் தேதி தொடங்குகிறது.




உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: December 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories