Home /News /sports /

கடைசி ஒருநாள் போட்டி - தொடக்கவீரர்களை இழந்து ஆஸி. தடுமாற்றம்

கடைசி ஒருநாள் போட்டி - தொடக்கவீரர்களை இழந்து ஆஸி. தடுமாற்றம்

இந்திய அணியினர்

இந்திய அணியினர்

India vs Australia | ஆஸ்திரேலியாவில் தொடரை வென்று இந்தியா சாதனை படைக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி மெல்பர்ன் நகரில் நடந்து வருகிறது. இப்போட்டியில் வென்று இந்தியா வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனைப் படைத்தது. இதையடுத்து தொடங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்பர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது.

இந்திய அணியில் தமிழக ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் இடம்பெற்றார். டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

மழை காரணமாக போட்டி தொடங்க தாமதம் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் கேரி மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகிய இருவரையும் புவனேஷ்வர் குமார் விரைவில் வெளியேற்றினார்.

இதனால், 14 ஓவர்களில் 39 ரன்களுக்கு ஆஸி அணி 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் கோலி தலைமையிலான இந்தியா மற்றொரு சாதனை நிகழ்த்தும். ஆஸ்திரேலிய மண்ணில் 1985-ல் சாம்பியன்ஸ் டிராபியிலும், 2008-ல் முத்தரப்பு தொடரிலும் இந்தியா பட்டம் வென்றுள்ளது.

ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை இதுவரை இந்தியா வென்றதில்லை. இந்த வரலாற்றை மாற்றும் வாய்ப்பு இன்று காத்திருக்கிறது.

Also see... இந்தியா - ஆஸ்திரேலியா இன்று 3-வது ஒருநாள் போட்டி
Published by:Vaijayanthi S
First published:

Tags: India vs Australia 2018

அடுத்த செய்தி