ஆஸ்திரேலியாவுடன் இன்று கடைசி போட்டி.. ஆறுதல் வெற்றிபெறுமா இந்தியா?

ஆஸ்திரேலியாவுடன் இன்று கடைசி போட்டி.. ஆறுதல் வெற்றிபெறுமா இந்தியா?

ind vs aus

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணி ஆறுதல் வெற்றிபெறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

 • Share this:
  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் தலா 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

  இதனைத் தொடர்ந்து, மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி, கான்பெர்ராவில் இன்று நடைபெறுகிறது.

  மேலும் படிக்க...Exclusive | 'ரஜினி அரசியலுக்கு வந்தால், தமிழ்நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவேன்'.. ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணராவ்..

  இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கியது. இதில் இந்திய அணி ஆறுதல் வெற்றிபெறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

  ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக டேவிட் வார்னருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: