ஆஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி..?

India vs Australia | ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி..?
INDvsAUS
  • Share this:
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ராஜ்கோட்டில் இன்று நடைபெறவுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ராஜ்கோட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. முதல் போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சொதப்பிய இந்திய அணி முழுதிறனையும் இந்த போட்டியில் வெளிப்படுத்த வேண்டும். இன்றையப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.


அதே சமயம் 2வது போட்டியில் வெற்றிப் பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ளதால் இன்றையப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

First published: January 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading