Home » News » Sports » CRICKET INDIA VS AUSTRALIA 2ND INNINGS INDIA SCORED 36 RUNS VJR

IND vs AUS | இந்திய அணி 36 ரன்களில் சுருண்டது... ஆஸ்திரேலியாவிற்கு 90 ரன்கள் வெற்றி இலக்கு

India vs Australia | கம்மின்ஸ் மற்றும் ஹசில்வுட் இந்திய அணி விக்கெட்களை போட்டி போட்டு எடுத்தனர்.

IND vs AUS | இந்திய அணி 36 ரன்களில் சுருண்டது... ஆஸ்திரேலியாவிற்கு 90 ரன்கள் வெற்றி இலக்கு
India vs Australia
  • News18 Tamil
  • Last Updated: December 19, 2020, 11:14 AM IST
  • Share this:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது இன்னிங்சில் இந்திய அணி 36 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 90 ரன்கள் இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3-வது நாளான இன்று நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய பும்ரா 2 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த பும்ரா டக் அவுட்டாகி வெளிறேினார். மயங்க் அகர்வால் 9 ரன்னிலும் துணை கேப்டன் ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினர்.

இந்திய அணி பெரிதும் எதிர்பாத்திருந்த கேப்டன் விராட் கோலியும் 4 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் அடுத்தடுத்து விக்கெட்களை சாய்த்தனர். இந்திய அணி 19 ரன்களுக்கு 6 விக்கெட்களை பறிகொடுத்தது தடுமாறியது.


இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து ஆஸ்திரேலிய வேகத்தில் சிக்கினர். கம்மின்ஸ் மற்றும் ஹசில்வுட் இந்திய அணி விக்கெட்களை போட்டி போட்டு எடுத்தனர். இறுதியாக இந்திய 36 ரன்களுக்கு சுருண்டது. கடைசி விக்கெட்டாக களமிறங்கிய ஷமி காயம் காரணமாக போட்டியிலிருந்து விலிகினார்.

இந்திய அணியில் புஜாரா, ரஹானே, ரவிசந்திர அஸ்வின் மூவரும் டக் அவுட்டாகினர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்ற இலக்க ரன்களே எடுத்தனர். மயங்க் அகர்வால் 9 ரன்கள் அடித்ததே இந்திய அணியின் அதிகபட்ச ரன்னாகும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: December 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories