Home » News » Sports » CRICKET INDIA VS AUSTRALIA 2ND INNINGS INDIA LOST 6 WICKETS VJR

IND vs AUS | ஷாக் மேல் ஷாக் கொடுத்த இந்திய அணி... 19 ரன்களில் 6 விக்கெட்களை பறிக்கொடுத்தது

இந்திய அணி பெரிதும் எதிர்பாத்திருந்த கேப்டன் விராட் கோலியும் 4 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார்.

IND vs AUS | ஷாக் மேல் ஷாக் கொடுத்த இந்திய அணி... 19 ரன்களில் 6 விக்கெட்களை பறிக்கொடுத்தது
  • News18 Tamil
  • Last Updated: December 19, 2020, 10:27 AM IST
  • Share this:
இந்திய அணி 2-வது இன்னிங்சில் 19 ரன்களுக்கு 6 விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறி வருகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3-வது நாளான இன்று நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய பும்ரா 2 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த புஜாரா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மயங்க் அகர்வால் 9 ரன்னிலும் துணை கேப்டன் ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினர்.


இந்திய அணி பெரிதும் எதிர்பாத்திருந்த கேப்டன் விராட் கோலியும் 4 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் அடுத்தடுத்து விக்கெட்களை சாய்த்து வருகிறார். கம்மின்ஸ் 4 விக்கெட்களை தற்போது வீழ்த்தி உள்ளார். இந்திய அணி 19 ரன்களுக்கு 6 விக்கெட்களை பறிகொடுத்து, 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 72 ரன்கள் முன்னிலையில் உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: December 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories