இந்தியா இப்போ ஜெயிக்கலேனா.. எப்பவும் முடியாது: டீன் ஜோன்ஸ்!

INDvAUS 2018: If India don't win this series, they will never win in Australia | டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 அல்லது 3-0 என்ற கணக்கில் வெல்வார்கள் என்று நம்புவதாக ஜோன்ஸ் கூறியுள்ளார். #INDvAUS

இந்தியா இப்போ ஜெயிக்கலேனா.. எப்பவும் முடியாது: டீன் ஜோன்ஸ்!
INDvAUS 2018: If India don't win this series, they will never win in Australia | டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 அல்லது 3-0 என்ற கணக்கில் வெல்வார்கள் என்று நம்புவதாக ஜோன்ஸ் கூறியுள்ளார். #INDvAUS
  • News18
  • Last Updated: November 30, 2018, 6:32 PM IST
  • Share this:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இப்போது கைப்பற்றவில்லை என்றால், இனி எப்போதும் முடியாது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் கணித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இரு அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி இந்த முறை கண்டிப்பாக வெல்ல வேண்டும் என முனைப்பில் உள்ளது. பந்தை சேதப்படுத்தி விவகாரத்தில் தடைபெற்றஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் அணியில் இல்லாதது இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.


Virat Kohli
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் விராட் கோலி (Cricket Australia)


ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் குறித்து இந்திய மற்றும் வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலானோர் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். அதேபோல், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரராக டீன் ஜோன்ஸ்-ம் இந்தியாவுக்கு சாதகமாக கூறியுள்ளார்.

“ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்திய அணிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்போது தவறவிட்டால், இனி அந்த வாய்ப்பு எப்போதும் கிடைக்காது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 அல்லது 3-0 என்ற கணக்கில் வெல்வார்கள் என்று நம்புகிறேன். இந்த முறை டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் என்று நான் நம்பவில்லை. அந்த அணி மீது நம்ப்பிக்கை இல்லை.” என்று தெரிவித்தார்.மேலும் பார்க்க...

First published: November 30, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்