‘பேட்மேன்’ ஆக மாறி புஜாராவை அவுட்டாக்கிய பேட் கம்மின்ஸ்! (வீடியோ)

#PatCummins sends #Pujara by sensational throw | இந்திய அணியைச் சரிவில் இருந்த மீட்டெடுத்த புஜாரா 123 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார். #AUSvIND

Web Desk | news18
Updated: December 6, 2018, 7:33 PM IST
‘பேட்மேன்’ ஆக மாறி புஜாராவை அவுட்டாக்கிய பேட் கம்மின்ஸ்! (வீடியோ)
புஜாராவை ரன் அவுட் செய்த பேட் கம்மின்ஸ் (Image/Twitter)
Web Desk | news18
Updated: December 6, 2018, 7:33 PM IST
அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் சதமடித்த புஜாராவை, அட்டகாசமான ரன் அவுட் மூலம் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் வெளியேற்றினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் (2), முரளி விஜய் (11) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர்.

ஒருமுனையில் கேப்டன் கோலி (3), ரகானே (13), ரோகித் சர்மா (37) ஆகியோர் விரைவில் நடையைக் கட்டினர். மறுமுனையில், பொறுமையாக விளையாடிய அவர், டெஸ்ட் அரங்கில் தனது 16-வது சதத்தைப் பதிவு செய்தார்.
Loading...


இந்திய அணியைச் சரிவில் இருந்த மீட்டெடுத்த புஜாரா 123 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹேசில்வுட் வீசிய 88-வது ஓவரை எதிர்கொண்டார். அந்த ஓவரில், ஆடுகளத்திற்கு மிக அருகே பந்தை தட்டி விட்டு, ரன் எடுக்க முடியற்சித்தார். ஆனால், பேட் கம்மின்சின் அட்டகாசமான ரன் அவுட்டால் பரிதாபமாக புஜாரா வெளியேறினார்.புஜாரா வெளியேறிய பிறகு, இந்திய அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. முதல் நாள் ஆட்டம் முடிவில், இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்தது. இஷாந்த் சர்மா 4 ரன்னுடனும், முகமது ஷமி 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

Also Watch...

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்