அடிலெய்டில் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்... ஆஸி. 191/7 சேர்ப்பு..

India vs Australia, 1st Test Day 2: Highlights | அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். #AUSvIND

news18
Updated: December 7, 2018, 2:09 PM IST
அடிலெய்டில் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்... ஆஸி. 191/7 சேர்ப்பு..
ஆஸ்திரேலியாவின் விக்கெட்டை வீழ்த்தியதைக் கொண்டாடும் இந்திய வீரர்கள் (BCCI)
news18
Updated: December 7, 2018, 2:09 PM IST
அடிலெய்டில் நடைபெற்று வரும் டெஸ்டில் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, புஜாரா (123) சதத்தால் முதல்நாள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் கடைசி விக்கெட் விழுந்ததால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.


பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில், முதல் ஓவரிலேயே ஃபிஞ்ச் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கவாஜா (28), ஷேன் மார்ஷ் (2) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் மார்கஸ் ஹேரிஸ் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் கைப்பற்றினார்.5-வது வீரராக களம் இறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 34 ரன்களிலும், கேப்டன் டிம் பெய்ன் 5 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்தார். 2-ம் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 61 ரன்களுடனும், ஸ்டார்க் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.இந்திய அணி சார்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தற்போது, 59 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியிடம் 3 விக்கெட்டுகள் கைவசம் உள்ளன.

Also Watch...

First published: December 7, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்