முதல் டி-20: இந்திய அணி முதலில் பேட்டிங்!

Australia Won The Toss and Choose to Fielding | இந்திய அணியில் மயங்க் மார்கண்டேவும், ஆஸ்திரேலிய அணி அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்ஹோம்ப்யும் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். #INDvAUS

முதல் டி-20: இந்திய அணி முதலில் பேட்டிங்!
டாஸ் போடும் கேப்டன் விராட் கோலி. (BCCI)
  • News18
  • Last Updated: February 24, 2019, 8:07 PM IST
  • Share this:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி இன்று (பிப்.24) இன்று இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. 2-வது மற்றும் கடைசி டி-20 போட்டி 27-ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதனையடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மார்ச் 2-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


விசாகப்பட்டினத்தில் தொடங்கிய முதல் டி-20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் மயங்க் மார்கண்டே அறிமுக வீரராக களமிறங்கினார். ஆஸ்திரேலிய அணி சார்பில் பீட்டர் ஹேண்ட்ஸ்ஹோம்ப் அறிமுக வீரராக களமிறங்கினார்.முதல் போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆடும் லெவன் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய லெவன் அணி விபரம்: ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், எம்.எஸ்.தோனி, தினேஷ் கார்த்திக், க்ருனல் பாண்டியா, உமேஷ் யாதவ், சாஹல், மயங்க் மார்கண்டே, பும்ரா

 

பேட்ட வசனத்துடன் ரிஷப் பண்ட்க்கு தோனி எச்சரிக்கை!

Also Watch...

First published: February 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்