Home /News /sports /

Ind vs Aus | முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா

Ind vs Aus | முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா

India vs Australia

India vs Australia

India vs Australia Test | இந்திய அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு சுருண்டது.

  • Last Updated :
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை நிதானாமாக எதிர்கொண்ட இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் விளையாடி 74 ரன்கள் எடுத்திருந்த போது ரன்அவுட்டாகினார்.

    இதையடுத்து 2-வது நாள் ஆட்டம் தொடங்கிய உடன் இந்திய அணி 11 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் எடுத்திருந்தது.

    இதை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆரம்பித்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆமை வேகத்தில் ரன் சேர்த்தனர். மேத்யூவ் வேட் 8 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா பந்துவீச்சில் சிக்கினார்.

    ஆஸ்திரேலிய அணியில் அடுத்து வந்த வீரர்களும் நிலைத்து நின்று ஆடவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் நெம்பர் 1 பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் 1 ரன்னில் அஸ்வின் சுழலில் சிக்கி வெளியேறினார். வேகப்பந்து வீச்சாளர்கள் திணறவிட்ட நிலையில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விக்கெட் வேட்டையில் இறங்கினார்.

    இறுதியாக ஆஸ்திரேலிய முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பெய்ன் மட்டும் சிறப்பாக விளையாடி 73 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கெட்களையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும், பும்ரா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 2-வது இன்னிங்சில் இந்திய அணி விளையாடி வருகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vijay R
    First published:

    Tags: India vs Australia

    அடுத்த செய்தி