Home /News /sports /

களத்துக்கு வெளியே ‘சீன்’போடுவதில் இந்திய அணியை அடிச்சுக்க முடியாது: தோல்விக்கு டிம் பெய்னின் புது உருட்டு

களத்துக்கு வெளியே ‘சீன்’போடுவதில் இந்திய அணியை அடிச்சுக்க முடியாது: தோல்விக்கு டிம் பெய்னின் புது உருட்டு

இந்திய அணி.

இந்திய அணி.

ஆஸ்திரேலியா தொடரின் போது களத்துக்கு வெளியே இந்திய அணி போட்ட ‘சீன்களினால்’ கவனச் சிதறல் ஏற்பட்டு ஆஸ்திரேலிய அணி தோல்வி கண்டதாக அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் புதிதாக ஒன்றை உருட்டி விட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
2018-19 தொடரில் விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சென்று அங்கு அந்த அணியை அதன் மண்ணில் 2-1 என்று டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது இந்திய அணி, அதன் பிறகு அடுத்த தொடரில் இந்திய அணி காயங்கள், கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட்டுக்குப் பிறகு நாடு திரும்பியது உள்ளிட்ட பின்னடைவுகளிலும் ரஹானே தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு 2-1 என்று உதை கொடுத்து வரலாறு  படைத்தது.

ரஹானே-புஜாரா


அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோற்றபோது இனி 4-0 தான், இந்திய அணி தேறவே வாய்ப்பில்லை என்றெல்லாம் பேசினர் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள், கடைசியில் அவர்கள அவர்கள் மண்ணில் உதைக்க இந்தியாவின் பி-டீமே போதும் என்ற நிலை உருவானது.

மெல்போர்னில் ரகானேயின் அருமையான சதம், அருமையான அஸ்வின், பும்ரா பவுலிங்கில் இந்தியா சமன் செய்தது, பிறகு சிட்னியில் 406 ரன்கள் வெற்றி இலக்கை ரிஷப் பந்த், புஜாரா, ஷுப்மன் கில் ஆகியோர் விரட்டும் முனைப்பு காட்ட டிம் பெய்ன் வயிற்றில் புளியைக் கரைத்தது, கடைசியில் காலையே நகர்த்த முடியாத ஹனுமா விஹாரியைக் கூட வீழ்த்த முடியாமல் அஸ்வின் பிரமாதமான ஒரு இன்னிங்சை ஆட இந்திய அணி பிரமாதமான ஒரு டிராவை நிகழ்த்தியது.

தங்கராசு நடராஜன்


பிறகு பிரிஸ்பனுக்குச் சென்றால் அங்கு குவாரண்டைன் என்று அச்சுறுத்த இந்திய அணி அங்கு செல்ல மாட்டோம், சிட்னியிலேயே 4வது டெஸ்ட்டையும் ஆடுகிறோம் என்றெல்லாம் சொன்னார்கள், ஆனால் கடையில் ஆஸ்திரேலிய கோட்டையான பிரிஸ்பனில் பும்ராவும் இல்லாமல் அஸ்வினும் இல்லாமல், சிராஜ், தமிழக இடது கை மித வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஆகியோருடன் களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய கோட்டையைத் தகர்த்தது, ரிஷப் பந்த் மீண்டும் ஒரு அபாரமான இன்னிங்ஸை ஆடி வெற்றி பெறச் செய்து உலகையே மூக்கின் மீது விரலை வைக்கச் செய்தார்.

தொடர்ச்சியாக 2 தொடர்களில் இந்திய அணி வென்று பார்டர் கவாஸ்கர் டிராபியை தூக்கிவந்ததை ஆஸ்திரேலியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

நடராஜன்.


இந்நிலையில் டிம் பெய்ன் கூறும்போது, “இந்திய அணிக்கு எதிராக ஆடுவதன் சவாலில் ஒரு அங்கம் என்னவெனில் ஒன்றுமேயில்லாத விஷயத்தை பெரிது படுத்தி நமக்கு தேவையில்லாத தொல்லைகளைக் கொடுப்பார்கள், இதன் மூலம் நம் கவனத்தை திசைத்திருப்புவார்கள். அந்தத் தொடரில் நாங்கள் இதற்குப் பலியாகி விட்டோம்.

ரிஷப் பந்த்.


இதற்கு சிறந்த உதாரணம், பிரிஸ்பனில் ஆடமாட்டோம் என்றார்கள். அதனால் எங்கு ஆடப்போகிறோம் என்பதில் எங்களுக்கு ஐயப்பாடு எழுந்தது. இது போன்ற சீன்களை உருவாக்குவதில் இந்திய அணி கில்லாடிகள். இதனால் நாங்கள் ஆட்டத்திலிருந்து எங்கள் கண்களை எடுக்க நேரிட்டது” என்றார்.

தொடரை வென்ற இந்திய அணிக்கும் கேப்டன் ரஹானேவுக்கும் ராஜ வரவேற்பு நடந்தது, நெட் பவுலராகச் சென்று 3 சர்வதேச ஆட்டங்களிலும் ஆடிய சேலத்தின் தமிழக வீரர் டி.நடராஜனுக்கு அவரது சொந்த ஊரில் பிரம்மாண்ட வரவேற்பு அளித்ததையெல்லாம் ரசிகர்களால் மறக்க முடியாது.
Published by:Muthukumar
First published:

Tags: India vs Australia, Indian cricket team, Rahane, Tim Paine

அடுத்த செய்தி