தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை இழந்துள்ளது. முக்கிய வீரர்களும் தொடர்ந்து சொதப்பி வருவதால் இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
கே.எல். ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினாலும், பவுலர்கள் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
குறிப்பாக அணியின் முன்னணி பந்து வீச்சாளராக இருக்கும் புவனேஸ்வர் குமார் கடந்த 2 போட்டிகளில் எந்த விக்கெட்டையும் அவர் வீழ்த்தவில்லை. 2 போட்டிகளில் 18 ஓவர்கள் வீசிய அவர் மொத்தம் 131 ரன்களை தென்னாப்பிரிக்க அணிக்கு கொடுத்துள்ளார். ஓவருக்கு எகானமி ரேட் 7.27 ரன்னாக உள்ளது.
இன்னும் மோசமான சாதனை என்னவென்றால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் விளையாடிய கடைசி 5 ஒருநாள் போட்டிகளிலும் அவர் எந்த விக்கெட்டையும் எடுக்கவில்லை. கடைசி 5 போட்டிகளில் 36 ஓவர்களை வீசிய அவர் மொத்தம் 272 ரன்களை கொடுத்துள்ளார். எகானமி ரேட் ஓவருக்கு 6.72 ரன்னாக உள்ளது.
2019 உலகக்கோப்பையில் இருந்து பவர்ப்ளேயில் மொத்தமே 3 விக்கெட்டுகளை மட்டுமே புவனேஸ்வர் குமார் வீழ்த்தியுள்ளார். ஆனால் வீசிய ஓவர்களின் எண்ணிக்கை 41.
ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா இழந்துள்ள நிலையில் கடைசிப்போட்டி நாளை கேப்டவுன் நகரில் நடக்கிறது. இதில் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அல்லது தீபக் சஹார் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Musthak
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.